Income Tax Saving: NPS முதலீடு அளிக்கும் சூப்பர் நன்மை, வரி விலக்கில் இரட்டிப்பு பலன்

Income Tax Saving: வரியை தவிர்க்க, முதலீடு செய்ய ஒரு நல்ல திட்டம் உள்ளது. இது ஒரு அரசாங்க முதலீட்டு கருவி. அதன் பெயர் தேசிய ஓய்வூதிய அமைப்பு. இது புதிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 11, 2024, 08:40 AM IST
  • அதிக வரி விலக்கின் பலனை எவ்வாறு பெறுவது?
  • வரி கணக்கிடுவது எப்படி?
  • உங்கள் வருமான வரி பூஜ்ஜியமாகிவிடும்.
Income Tax Saving: NPS முதலீடு அளிக்கும் சூப்பர் நன்மை, வரி விலக்கில் இரட்டிப்பு பலன் title=

Income Tax Saving: வருமான வரியை சேமிக்க நாம் பல வழிகளை ஆராயும் காலம் இது. வரி செலுத்த வேண்டிய கவலை இல்லாமல் இருக்க பணத்தை முதலீடு செய்ய இந்த நிதி ஆண்டில் நமக்கிருக்கும் கடைசி மூன்று மாதங்கள் இவை. பணத்தை எங்கே முதலீடு செய்வது? அனைத்துமே பிரிவு 80சி விதிவிலக்கில் முடிகிறது. இவற்றைத் தாண்டி ஏதேனும் நல்ல முதலீட்டு விருப்பம் உள்ளதா? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருக்கும். முதலீடு செய்ய மற்றொரு நல்ல திட்டம் கண்டிப்பாக உள்ளது. இது ஒரு அரசாங்க முதலீட்டு கருவி. அதன் பெயர் தேசிய ஓய்வூதிய அமைப்பு (National Pension Scheme). இது புதிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இரட்டை வரிச் சலுகையைப் பெறக்கூடிய ஒரு கருவியாகும். 50,000 வரை இதில் வரிச் சலுகை உண்டு. ஆனால், சொந்தமாக என்பிஎஸ்-ல் முதலீடு செய்வது பயனளிக்காது. நீங்கள் உங்கள் முதலாளி / நிறுவனம் மூலம் NPS -ஐ எடுத்துக் கொண்டால், அதிக பலன்களைப் பெறுவீர்கள். வரிவிலக்கினாலும் பலன் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் காணலம. 

80CCD இல் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்

NPS இல் முதலீடு செய்தால், வருமான வரியின் 80CCD பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். இது இரண்டு துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது - 80CCD(1) மற்றும் 80CCD(2). இது தவிர, 80CCD(1) இன் மற்றொரு துணைப் பிரிவு உள்ளது - 80CCD(1B). 80CCD(1)ன் கீழ் ரூ.1.5 லட்சமும், 80CCD(1B)ன் கீழ் ரூ.50 ஆயிரமும் வரிவிலக்கு பெறலாம். ஆனால், 80CCD(2)ன் கீழ் இந்த விலக்கு ரூ.2 லட்சத்தைத் தவிர, வருமான வரி விலக்கையும் கோரலாம்.

அதிக வரி விலக்கின் பலனை எவ்வாறு பெறுவது?

இந்த விதிவிலக்கு NPS இல் முதலாளியின் முதலீட்டில் கிடைக்கும். இது NPS through employer நன்மை ஆகும். இதில், முதலாளி  / நிறுவனத்தால் என்பிஎஸ் முதலீட்டில் வரி விலக்கு கோரப்படுகிறது. அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை முதலாளி NPS இல் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், மத்திய ஊழியர்களுக்கு, 14 சதவீதம் என்பிஎஸ்-ல் முதலீடு செய்யப்படுவதால், இதற்கு வரிவிலக்கு உண்டு. பெரும்பாலான நிறுவனங்கள் NPS வசதியை வழங்குகின்றன. நிறுவனத்தின் HR உடன் பேசி NPS இல் முதலீடு செய்யலாம். இதில் கூடுதல் வரிவிலக்கு பெறலாம் என்பது இதன் நன்மை.

மேலும் படிக்க | இந்த வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் புதிய உத்தரவு! உங்கள் வங்கியின் பெயர் உள்ளதா?

வரி கணக்கிடுவது எப்படி? (NPS Calculator)

உங்கள் சம்பளம் 10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இந்த சம்பளம் வரிக்கு உட்பட்ட வருமானமாக (Taxable Salary) இருக்கும். ஆனால், மொத்த சம்பளத்தில் 80C ரூ.1.5 லட்சமும், 80CCD(1B) ரூ.50 ஆயிரமும் பிடித்தத்தை நீக்கவும். இதற்குப் பிறகு, ரூ.50 ஆயிரம் நிலையான விலக்கையும் (Standard Deduction) கழிக்கவும். இப்போது வரிவிதிப்பு வருமானம் ரூ.7.50 லட்சமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தில் ரீஎம்பர்ஸ்மெண்ட் இருந்தால், சீருடை அலவன்ஸ், பிராட்பேண்ட் அலவன்ஸ், கன்வேயன்ஸ் அலவன்ஸ், பொழுதுபோக்கு போன்றவை மூலம் ரூ.2.50 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். ரீஎம்பர்ஸ்மெண்ட் க்ளெய்ம் செய்த பிறகு, வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 5 லட்சமாக இருக்கும்.

உங்கள் வருமான வரி பூஜ்ஜியமாகிவிடும் (Zero Tax)

உங்கள் வருமான வரி பூஜ்ஜியமாகிவிடும். பிரிவு 80CCD(2)ன் கீழ், நீங்கள் உங்கள் முதலாளி / நிறுவனம் மூலம் NPS இல் முதலீடு செய்தால்,  ரூ.50,000 முதலீடு செய்யலாம். இதன் மூலம் ரூ.10 லட்சம் சம்பளத்தில் உள்ளவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சம் குறைக்கப்படும். 87A பிரிவின் கீழ் இந்த வரிக்கு உட்பட்ட வருமானத்தில் வரி தள்ளுபடியின் (Tax Rebate) பலன் கிடைக்கும். அதாவது உங்கள் மொத்த வருமானத்தின் மீதான வரி பூஜ்ஜியமாக இருக்கும்.

அடிப்படை சம்பளத்தை வைத்து முதலீடு தீர்மானிக்கப்படும்

உங்கள் முதலாளி மூலம் NPS இல் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் (Income Tax) பிரிவு 80CCD(2)ன் கீழ் அதிகபட்ச விலக்கு பெறலாம். இதில் முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை. ஆனால், உங்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் மட்டுமே உங்கள் முதலீட்டின் அளவு முடிவு செய்யப்படும்.

மேலும் படிக்க | SIP: மாதம் ரூ. 5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News