ரூபாய் நோட்டு அப்டேட்: கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது: இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும் ரூபாய் நோட்டுகள் வழங்கி பொருள் வாங்கும், முறை மாற்றமடையவில்லை. அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்திருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளப் பலரும் மறுப்பர். ஒருவேளை உங்களிடம் அப்படி ஒரு பணம் இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா?.. என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி (RBI) கிழிந்த சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன் விவரத்தை முதலில் காண்போம்.
* கிழிந்த அல்லது சேதமடைந்த (mutilated and torn notes) 5,10,20, 50 ரூபாய் நோட்டுகள் பாதியாவது உங்களிடம் இருக்க வேண்டும். இதற்கு பதிலாக புதிய ரூ.20 நோட்டு உங்களுக்கு கிடைக்கும்.
* அதேபோல் 20க்கும் மேற்பட்ட சிதைந்த நோட்டுகள் உங்களிடம் இருந்து, அவற்றின் மதிப்பு ரூ.5,000க்கு மேல் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Budget 2024: நடுத்தர வர்க்கத்தினர் மகிழும் வகையில் வரிவிலக்கு அறிவிப்பு இருக்குமா..!
* நோட்டுகளை மாற்றுவதற்கான எளிய விதி என்னவென்றால், ஒரு சிதைந்த ரூபாய் நோட்டில் பாதுகாப்பு சின்னம் (காந்திஜியின் வாட்டர்மார்க், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் அல்லது வரிசை எண் போன்றவை) இருந்தால் அவற்றை மாற்ற வங்கிகள் மறுக்க முடியாது.
* அதேபோல் கள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) தெரிவித்துள்ளது.
* பழைய நோட்டுகளை (Currency Notes) எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை. அதுமட்டுமின்றி நோட்டு மோசமாக எரிந்திருந்தாலோ அல்லது பல துண்டுகளாக இருந்தாலோ அவை மாற்றப்படாது.
* நீங்கள் வேண்டுமென்றே நோட்டை வெட்டிவிட்டதாகவோ அல்லது கிழித்துவிட்டதாகவோ வங்கி அதிகாரி உணர்ந்தால், அந்த சந்தர்பத்திலும் அவர் உங்கள் நோட்டை மாற்ற மறுக்கலாம்.
சேதமடைந்த பணத்திற்கு முழு மதிப்புப் பெற அதிகாரம் உள்ளதா?
அரசியல் கோஷங்கள், கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், 2009 விதி எண் 6(3)-ன்படி சட்டப்படி பணமென கருதப்படமாட்டாது. அதற்கான உரிமை தொகையும் வழங்கப்படாது. “நோட்டு திருப்பித் தருதல்” விதிகளின் விதி எண் 6(3) படி திருப்பி அளிக்கவே ஆர்.பி.ஐ பரிந்துரைத்துள்ளது.
ஒரு ரூபாய் நோட் கிழிந்திருந்தாலோ, ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அது சிதைந்த நோட்டாக மட்டுமே கருதப்படும். அவ்வாறு சிதைந்த நோட்டுகள் எந்த வங்கியிலும் வழங்கப்பட்டு மாற்றலாம். ரிசர்வ் வங்கி விதி 2009 படி, அந்த பணத்திற்காக மதிப்பினை பெற்றுக்கொள்ளலாம். எரிந்து, கருகிப்போன, பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொண்ட பணத்தை எந்த வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வைத்திருப்பவர், அதை ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம். அங்குப் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.
ஏடிஎம் கிழிந்த நோட்டை மாற்றுவது எப்படி?
ஏடிஎம்மில் இருந்து எடுக்கப்பட்ட சிதைந்த நோட்டுகளை மாற்ற, எந்த ஏடிஎம்மில் இருந்து நோட்டுகள் வந்ததோ அந்த வங்கிக்கு செல்ல வேண்டும். அங்கு சென்ற பிறகு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதில் நீங்கள் பணத்தை எடுத்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை எழுத வேண்டும். இதற்குப் பிறகு, விண்ணப்பத்துடன், ஏடிஎம்மில் இருந்து வந்த பரிவர்த்தனை ரசீதையும் இணைக்க வேண்டும். சீட்டு இல்லை என்றால், மொபைலில் பெறப்பட்ட பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டும். இதற்குப் பிறகு, வங்கி உடனடியாக உங்கள் நோட்டுகளை மாற்றித் தரும்.
மேலும் படிக்க | Old Tax Regime Vs New Tax Regime: NPS-க்கான வரி விலக்கை கோருவது எப்படி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ