டெபாசிட் மிஷின் மூலம் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ளலாமா?
சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எப்படி, என்ன செய்யலாம் என்பதை விளக்கும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவல் அனுப்பியது.
நாட்டில் இதுவரை புழக்கத்தில் இருந்துவந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து ரூ.2000 நோட்டுக்களை வைத்திருக்கும் பலரும் அந்த நோட்டுக்களை மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர். பெரும்பாலான தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் போது ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சரியான அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்துகிறது. ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விஷயத்தில் வங்கிகள் தங்கள் சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி (ஆர்பிஐ) ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2023 ஆகும். சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற என்ன செய்யலாம் என்பதை விளக்கும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவல் அனுப்பியது. அதில் வங்கியின் எந்த கிளையிலும் ஒரு நேரத்தில் ரூ. 20,000 வரை மாற்றிக்கொள்ளலாம், வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நேரத்தில் ரூ. 20,000 வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியது.
மேலும் படிக்க | Indian Railways: இனி இவங்களுக்குதான் லோயர் பர்த்.. பயணிகளுக்கு முக்கிய அப்டேட்!!
ரூ.2,000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை உங்கள் கணக்கில் வழக்கமான முறையில், எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், தற்போதுள்ள கேஒய்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு டெபாசிட் செய்யலாம் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்ய வீட்டு வாசல் வங்கி வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ரூபாய் நோட்டுகளை 24x7 டெபாசிட் செய்ய எங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் உள்ள எங்களின் பண வைப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டை மாற்ற வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருப்பதை விரும்பாதவர்கள், ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் பண வைப்பு இயந்திரத்தில் உங்களின் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் பண வைப்பு இயந்திரத்தில் டெபாசிட் செய்வது எப்படி?
1) ஐசிஐசிஐ வங்கியின் பண வைப்பு இயந்திரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.
2) ஏடிஎம் இயந்திரத்தில் கார்ட்லெஸ் கேஷ் டெபாசிட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து 'வாடிக்கையாளர்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3) 12 இலக்க கணக்கு எண்ணை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
4) பெயரை உறுதிசெய்து, ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
5) கணக்கு எண்ணை உள்ளிட்ட பிறகு திறக்கப்படும் ஸ்லாட்டில் பணத்தை வைக்கவும்.
6) பரிவர்த்தனை செயலாக்கப்படும் வரை காத்திருக்கவும், இயந்திரம் தொகையை எண்ணி கணக்கிடும்.
7) இது டெபாசிட் வகைகளைக் காண்பிக்கும்- ஏற்றுக்கொள் எனும் பட்டனை கிளிக் செய்யவும்.
8) உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
9) பரிவர்த்தனை ரசீதை உறுதிசெய்து சேகரிக்க வேண்டும்.
செப்டம்பர் 30, 2023 வரை அதன் தனிப்பட்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கையாளுவதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்றும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission 46% டிஏ ஹைக் உறுதி: வந்தது அதிரடியான அப்டேட்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ