ஜூன் 1 ஆம் தேதி முதல் வரவுள்ள விதி மாற்றங்கள்: நாளை முதல் புதிய மாதம் தொடங்க உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பல விதிகளில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் ஜூன் மாதத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், இந்த மாற்றங்களைப் பற்றி அனைவரும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியமாகும். இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மின்சார இரு சக்கர வாகனங்கள் விலை அதிகமாக இருக்கும்
மின்சார இரு சக்கர வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். ஜூன் 1 முதல், மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை உயர்த்தப்படும். மே 21 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தொழில்துறை அமைச்சகம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக ஜூன் மாதம் முதல் மின்சார இரு சக்கர வாகனங்களின் விலை முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்கும்.
இபிஎஃப்ஓ விதிகளில் மாற்றம் இருக்கும்
ஜூன் 1 முதல் இபிஎஃப்ஓ விதிகளில் மாற்றம் இருக்கும். இந்த விதியின்படி, இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பிஎஃப் கணக்கை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம். ஜூன் 1ம் தேதி வரை ஆதார் எண்ணை பிஎஃப் உடன் இணைக்கவில்லை என்றால், அந்த இழப்பை நீங்கள் ஏற்க வேண்டியிருக்கும்.
ஐடிஆர் இணையதளத்தில் மாற்றங்கள்
ஐடிஆர் அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. புதிய ஐடிஆர் இணையதளம் ஜூன் 7 முதல் தொடங்கப்படும். அதாவது ஜூன் 1 முதல் 6 வரை இந்த இணையதளத்தை உங்களால் பயன்படுத்த முடியாது. www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை பயனர்கள் பார்வையிட வேண்டி இருக்கும். அதை 6 நாட்களுக்குப் பயன்படுத்த முடியாது.
மேலும் படிக்க | அலெர்ட்! ஜூன் மாதம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்! முழு விவரம் இதோ!
பாங்க் ஆஃப் பரோடா காசோலை செலுத்தும் முறையை மாற்றுகிறது
பாங்க் ஆஃப் பரோடாவும் அதன் விதிகளை மாற்றப் போகிறது. உங்களுக்கும் இந்த வங்கியில் கணக்கு இருந்தால், ஜூன் 1 முதல், காசோலை செலுத்தும் விதியை வங்கி மாற்றும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிறு சேமிப்பு திட்ட விகிதங்களில் மாற்றம்
இது தவிர, சிறு சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களையும் அரசாங்கம் மாற்றக்கூடும். மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்கிறது.
எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஐஓசிஎல் உள்ளிட்ட பல எண்ணெய் நிறுவனங்கள் 1ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன. தற்போது நாட்டின் பல நகரங்களில் ரூ.1000 -க்கும் அதிகமான விலையில் சிலிண்டர்கள் கிடைக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தங்க ஹால்மார்க்கிங் விதிகள்
ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தை ஹால்மார்க் செய்வது தொடர்பான விதிகளும் அமல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் மே 31 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்படும். இந்த உத்தரவு கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிஎன்ஜி - பிஎன்ஜி விலைகள்
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அல்லது வாரத்தில் இருந்து சிஎன்ஜி - பிஎன்ஜி விலையிலும் மாற்றம் இருக்கும். பெட்ரோலிய நிறுவனங்கள் டெல்லி மற்றும் மும்பையில் விலையை மாற்றி அமைக்கின்றன. இந்த முறையும் அவற்றின் விலை மாறக்கூடும். அவற்றின் விலை ஏப்ரல் மாதத்தில் டெல்லி-என்சிஆர் -இல் குறைந்துள்ளது. மே மாதத்தில் அது நிலையானதாக இருந்தது, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் ஜூன் மாதத்தில் சிஎன்ஜி-பிஎன்ஜி -யின் விலை என்னவாக இருக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ