அகவிலைப்படி உயர்வு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். அவர்களுக்கு கூடிய விரைவில் ஊதியத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் இருக்கப்போகின்றது. ஏனெனில் ஊழியர்களின் அகவிலைப்படியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஊழியர்களுக்கு 42 சதவிகிதத்துக்கு பதிலாக, 46 சதவிகித அகவிலைப்படி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூலை 2023 -க்கான டிஏ ஸ்கோரில் பம்பர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான டிஏ மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின்படி, இது 0.9 புள்ளிகள் உயர்ந்துள்ளது. ஜூலை 2023 இல், ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்றும் அது 46% ஆக அதிகரிக்கும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான புதிய அப்டேட் என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த எண்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் வெளியிடப்படும். இதன் அடிப்படையில், அடுத்த 6 மாதங்களில் நடைபெற உள்ள சீராய்வு வரை, டிஏ மதிப்பெண் எவ்வளவு எட்டியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஏப்ரல் 2023 மாதத்திற்கான குறியீட்டு எண் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மார்ச் மாதத்தில் 133.3 ஆக இருந்த CPI(IW)BY2001=100, ஏப்ரலில் 134.2 ஆக உள்ளது தெரியவந்துள்ளது. இதில் 0.9 புள்ளிகள் என்ற அளவில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலையில் அகவிலைப்படி அதிகரிப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஏ உயர்வில் மொத்தம் 4 சதவீதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் ஏற்கனவே கூறி வந்தனர். இப்போது ஏஐசிபிஐ குறியீடும் இதையே சுட்டிக்காட்டுகிறது. குறியீட்டு எண்களால் நிர்ணயிக்கப்பட்ட டிஏ மதிப்பெண்ணிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளின்படி, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 45.04% ஐ எட்டியுள்ளது. இது மார்ச் மாதத்தை விட 0.58 சதவீதம் அதிகமாகும். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 46 சதவீத அகவிலைப்படி உறுதி செய்யப்படும் என்பது உறுதி. அதாவது டிஏவில் மொத்தம் 4 சதவீதம் அதிகரிக்கும்.
அகவிலைப்படி மதிப்பெண்களின் விவரம் எப்படி இருந்துள்ளது?
7வது ஊதியக் குழுவின் கீழ், தொழிலாளர் பணியகம் 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (தொழில்துறை தொழிலாளர்கள்) எண்களை வெளியிட்டுள்ளது. இதில் ஜனவரி மாதத்தில் குறியீடு வலுவாக இருந்தது. பிப்ரவரியில் சிறிது சரிவு ஏற்பட்டது. ஆனால், பிப்ரவரியில் டிஏ மதிப்பெண் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் மீண்டும் குறியீட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. குறியீட்டு எண் 132.7 புள்ளிகளில் இருந்து 133.3 புள்ளிகளாக அதிகரித்தது. இப்போது ஏப்ரல் மாதத்திற்கான குறியீட்டு எண்களும் வந்துள்ளன. இதிலும் ஒரு பெரிய ஏற்றம் காணப்படுகின்றது.
குறியீட்டின் எண்ணிக்கை 134.2 -ஐ எட்டியுள்ளது. அதே சமயம் அகவிலைப்படி மதிப்பெண் 45.04 சதவீதத்தை எட்டியுள்ளது. டிஏ மதிப்பெண் ஜனவரியில் 43.08 சதவீதமாகவும், பிப்ரவரியில் 43.79 சதவீதமாகவும், மார்ச்சில் 44.46 சதவீதமாகவும் இருந்தது. அடுத்து, மே எண்கள் ஜூன் இறுதியில் வெளியிடப்படும். அதாவது ஜூன் 30 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று இந்த எண்கள் அரிவிக்கப்படும்.
ஜனவரி 2023 முதல் ஏப்ரல் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு விவரங்களை பற்றி இங்கே காணலாம்:
ஜனவரி 2023 - CPI(IW)-132.8 - மாத டிஏ% ஏற்றம்-43.08
பிப்ரவரி 2023 - CPI(IW)-132.7 - மாத டிஏ% ஏற்றம்-43.79
மார்ச் 2023 - CPI(IW)-133.3 - மாத டிஏ% ஏற்றம்-44.46
ஏப்ரல் 2023 - CPI(IW) - 134.2 - மாத டிஏ% ஏற்றம்-45.04
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ