Reserve Bank of India: இந்திய ரிசர்வ் வங்கி நேற்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தவறான செயல்முறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் நேற்றும் சில நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் விவரத்தை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோத்ரேஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Godrej Housing Finance Ltd), ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Aadhar Housing Finance Ltd) மற்றும் ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Housing and Urban Development Corporation Ltd) ஆகியவற்றுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெள்ளிக்கிழமை அபராதங்களை விதித்துள்ளது. 


- கோத்ரேஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகியவற்றுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.3.5 லட்சம் அபராதத்தை மத்திய வங்கி விதித்தது.


தேசிய வீட்டுவசதி வங்கி சட்டம், 1987 இன் பிரிவு 52A இன் விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.


மார்ச் 31, 2022 நிலவரப்படி அதன் நிதி நிலையைக் குறிக்கும் வகையில், தேசிய வீட்டுவசதி வங்கி கோத்ரேஜ் ஹவுசிங் ஃபைனான்ஸில் சட்டப்பூர்வ ஆய்வை நடத்தியது. 


"ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இந்த நிறுவனம் இணங்கவில்லை என்ற ஆய்வின் மேற்பார்வையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், அந்த நிறுவனத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வழிகாட்டுதல்களுக்கு இணங்காத செயல்முறைகள் காரணமாக அபராதம் விதிக்கப்படாமல் இருக்க அந்த நிறுவனத்திடம் ஏதாவது பதிலோ காரணமோ உள்ளதா என்பதை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது" என்று ஆர்பிஐ (RBI)தெரிவித்துள்ளது. இந்த நோட்டீசுக்கான நிறுவனத்தின் பதிலைப் பரிசீலித்த பிறகு, நிறுவனத்திற்கு எதிரான பின்வரும் குற்றச்சாட்டு நீடித்திருப்பதை உச்ச வங்கி கண்டறிந்து, பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என தீர்னானித்தது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்


"ரூ. 75 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட சில கடன்களை அனுமதிக்கும் முன் நிறுவனம் இரண்டு சுயாதீன மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறத் தவறிவிட்டது" என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ்


ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ் விஷயத்தில், ரிசர்வ் வங்கி, "'நியாயமான நடைமுறைக் குறியீடு' குறித்த ஆர்பிஐ உத்தரவுகளை மீறி, குறிப்பிட்ட கடனாளிகளுக்கு கடன் வழங்குவதற்கு/ காசோலையை வழங்கிய தேதிக்கு முந்தைய காலத்திற்கு கடன்களுக்கு வட்டி வசூலித்ததாக ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது" என கூறியுள்ளது.


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம்


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், "2021-22 நிதியாண்டில் அதன் வாடிக்கையாளர்களின் இடர் வகைப்படுத்தலை (Risk cCtegorisation)மேற்கொள்ளத் தவறிவிட்டது. மேலும் கணக்குகளின் இடர் வகைப்படுத்தலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்கான அமைப்பை ஏற்படுத்தவில்லை" என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், "NHB சட்டத்தின் பிரிவு 29B இன் படி, அதன் வைப்பாளர்களுக்கு ஆதரவாக முதலீடு செய்த சொத்துக்களுக்கு ஃப்ளோட்டிங் கட்டணத்தை உருவாக்கவில்லை" என்றும் "அதை நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யவில்லை" என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


மேற்கூறிய காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதங்களை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல்: ரூ.50,000 சம்பளம் மூலம் ரூ.2 கோடி சேர்ப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ