மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்

7th Pay Commission: ஜூலை 2024 -க்கன டிஏ உயர்வு குறித்து அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7th Pay Commission: டிஏ மூன்று சதவீதம் அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53 சதவீதமாக அதிகரிக்கும். நான்கு சதவீத அதிகரிப்பு இருந்தால் இது 54 சதவீதமாக உயரும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வை அளிக்கும். ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 /13

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் மிகப்பெரிய நல்ல செய்தி ஒன்று காத்திருக்கின்றது. நீண்ட நாட்களாக அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயத்துக்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 /13

ஜூலை 2024 -க்கன டிஏ உயர்வு குறித்து அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு எப்பொழுது வரும் என்று அரசாங்கத்தின் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. எனினும் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று கூறப்படுகின்றது.  

3 /13

ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் ஏற்படுகின்றது.

4 /13

ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபஐ எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றது.

5 /13

சமீபத்தில் ஜூன் மாதன்  ஏஐசிபிஐ எண்கள் வெளிவந்துள்ள நிலையில் ஜூலை 2024 முதலான டிஏ உயர்வு (DA Hike) 3% இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் ஒரு சாரார் டிஏ உயர்வு நான்கு சதவீதம் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். 

6 /13

டிஏ மூன்று சதவீதம் அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53 சதவீதமாக அதிகரிக்கும். நான்கு சதவீத அதிகரிப்பு இருந்தால் இது 54 சதவீதமாக உயரும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வை அளிக்கும்.

7 /13

ஜனவரி 2024 காண அதிகரிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஜனவரியில் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரித்தது.  

8 /13

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

9 /13

பணவீக்கம் மற்றும் அவ்வப்போது அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) ஆகிய இரு தரப்பிற்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைகின்றது.

10 /13

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு இதுதான்: டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான சராசரி AICPI - 115.76)/115.76] x 100; பொதுத்துறை ஊழியர்களுக்கான டிஏ கணக்கீடு - DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான சராசரி AICPI - 126.33)/126.33] x 100. இங்கு, AICPI என்பது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டைக் குறிக்கிறது.   

11 /13

சம்பள உயர்வு கணக்கீடு: இந்த முறை அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு இருக்கும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். ஜூலை மாத திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவரது மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.

12 /13

இதற்கிடையில் கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படிக்கான அரியர் தொகையை அரசாங்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனவரி 2020, ஜூலை 2020, ஜனவரி 2021 என அகவிலைப்படியின் 3 தவணைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அப்போது டிஏ முடக்கப்பட்டு அந்தத் தொகை அதிக தேவையில் இருக்கும் நலிந்த பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்த உடன் டிஏ முடக்கம் நீக்கப்பட்டது. முடக்கப்பட்ட 18 மாத டிஏ அரியர் தொகையை  வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

13 /13

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.