ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் இனி அதிகமாக வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை, ஏனெனில் அவர்களுக்கென்று வங்கி குறிப்பிட்ட சில சேவைகளை மொபைலிலேயே பயன்படுத்தி கொள்ளும் வசதியை வழங்குகிறது.  சமீபத்தில், எஸ்பிஐ வங்கி இரண்டு புதிய இலவச எண்களை வெளியிட்டுள்ளது, அதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களிலும், இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்களின் தொலைபேசி வாயிலாகவே வங்கி சேவைகளை இருந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 


இதுகுறித்து எஸ்பிஐ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜூலை-3 அன்று செய்த ட்வீட்டில், “உங்கள் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு கால் செய்யுங்கள்! எஸ்பிஐ தொடர்பு மையத்தை கட்டணமில்லா 1800 1234 அல்லது 1800 2100 என்ற எண்ணில் அழைக்கவும்" என்று தெரிவித்துள்ளது.  எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இலவச எண்களில் ஒன்றை அழைப்பதன் மூலம் பின்வரும் சேவைகளைப் பெறலாம்.


1) அக்கவுண்ட் பேலன்ஸ் மற்றும் கடைசி ஐந்து டிரான்ஸாக்ஷன்களின் விவரங்கள்.


2) ஏடிஎம் கார்டைத் பிளாக் செய்வது மற்றும் டிஸ்பேட்ச் செய்வது.


3) முந்தைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்த பிறகு புதிய ஏடிஎம் கார்டை பெற கோரிக்கை விடுத்தல்.


4) புக் டிஸ்பேட்ச் நிலையை சரிபார்த்தல்.


5) வரி விவரங்கள் (டிடிஎஸ்), மின்னஞ்சல் மூலம் டெபாசிட் வட்டி சான்றிதழ்.


“தயவுசெய்து எஸ்பிஐ-ன் 24X7 ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும், அதாவது 1800 1234 (டோல்-ஃப்ரீ), 1800 11 2211 (டோல்-ஃப்ரீ), 1800 425 3800 (டோல்-ஃப்ரீ), 1800 2100 (டோல்-ஃப்ரீ) அல்லது 598090 நாட்டில் உள்ள அனைத்து லேண்ட்லைன்கள் மற்றும் மொபைல் போன்களில் இருந்து இலவச எண்களை அணுகலாம்" என்று எஸ்பிஐ அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.



ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வீட்டுக் கடன் போர்ட்ஃபோலியோ ரூ. 5.62 லட்சம் கோடியாக உள்ளது.  மார்ச் 31, 2022 நிலவரப்படி, வங்கியின் சிஏஎஸ்ஏ விகிதம் 45.28% மற்றும் ரூ. 28 லட்சம் கோடிக்கும் அதிகமான முன்பணத்துடன் ரூ. 40.5 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.  எஸ்பிஐ வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன்களில் முறையே 35.3% மற்றும் 23.7% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.  இணைய வங்கி மற்றும் மொபைல் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முறையே 100 மில்லியன் மற்றும் 48 மில்லியன் ஆகும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR