சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சம அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இனி அவர்கள் தாழ்த்தப்படக்கூடாது என்ற நிலை ஏற்படவுமே இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என ஜாதி அடிப்படையில் நான்கு பிரிவுகளாக சமூகம் பிரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையை மாற்றி பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தைத் தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) இன்னும் ஏற்கவில்லை என்றாலும் மத்திய அரசுப் பணிகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


ALSO READ | மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!


இந்த முறை சமூக சமமின்மையை ஏற்படுத்தும் என்றும், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையற்றது என்றும் பல கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் ஒன்றிய அரசு அதுகுறித்து எந்த புகாரையும் காதுகளில் வாங்கிக் கொள்வதில்லை.



இந்த நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் எஸ்.பி.ஐ வங்கி தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட முன்னேறிய வகுப்பினர் குறைந்த மதிப்பெண் எடுத்தாலே வேலை என்ற நிலை நீடித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கண்டனங்கள் எழுவதும் அதனை எஸ்.பி.ஐ வங்கி கண்டுகொள்ளாமல் போவதும் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.


 



 


சில நாட்களுக்கு முன் நடைபெற்ற எஸ்.பி.ஐ (SBI) கிளெரிக்கல் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் தேர்ச்சி பெற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் 61.75 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும், முன்னேறிய வகுப்பினர் 47.75 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எப்படித் தாழ்த்தப்பட்டவர்களை விட முன்னேறிய வகுப்பினர் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற முடியும் என சமூகநீதி நிலைப்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


சமூகத்தில் சமநிலையை உருவாக்கி ஜாதி பேதமில்லாமல் அனைத்து பணிகளிலும் அனைவரையும் அமர்த்தும் பொறுப்பையே இட ஒதுக்கீடு கொண்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே அதிக பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் முன்னேறிய வகுப்பினர் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றால் அது மீண்டும் அவர்களுக்கு சாதமாகவே போய் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.


ALSO READ | SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR