ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டு இருக்கின்றது.  அதாவது இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ரென்ட் பேமெண்ட் மற்றும் வணிகர் இஎம்ஐ டிரான்ஸாக்ஷன் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு இப்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகை பரிவர்த்தனைகளுக்கான கிரெடிட் கார்டு பயனர்களின் செயலாக்க கட்டணத்தை வங்கி திருத்தி அமைந்துள்ளதால் பரிவர்தனைகளுக்கு கட்டணத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பான் கார்டு பயனாளர்கள் இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம் 



எஸ்பிஐ வங்கி அறிவித்த புதிய கட்டணங்கள் 15 நவம்பர் 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.  இதுகுறித்து எஸ்பிஐ அதன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கையில், 'நவம்பர் 15, 2022, அனைத்து வணிகர் இஎம்ஐ ட்ரான்ஸாக்ஷன்களுக்கும் செயலாக்கக் கட்டணம் ரூ.199 ஆக மாற்றியமைக்கப்படும் + ரூ.99 முதல் பொருந்தக்கூடிய வரிகள் + பொருந்தக்கூடிய வரிகள். W.e.f 15 நவம்பர் 2022, செயலாக்கக் கட்டணம் ரூ.99 + அனைத்து ரென்ட் பேமெண்ட் பொருந்தக்கூடிய வரிகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று கடந்த செப்டம்பர் மாதத்தில் தனியார் துறை கடன் வழங்கும் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கியும் கிரெடிட் கார்டுக்கான ரென்ட் பேமெண்டை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது, அந்த செய்தியில், 'அன்புள்ள வாடிக்கையாளர்களே, 20-அக்டோபர்-22 முதல், உங்கள் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டில் ரென்ட் பேமெண்ட் செலுத்துவதற்கான அனைத்து டிரான்ஸாக்ஷன்களுக்கும் 1% கட்டணம் வசூலிக்கப்படும்.' என்று செய்தி அனுப்பியுள்ளது.  கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரென்ட் பேமெண்ட் செலுத்துவதற்கு கட்டணம் விதிக்கும் முதல் வங்கி ஐசிஐசிஐ வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ