SBI Home Loan Offer : பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) சிறப்பு வீட்டுக் கடன் திட்டம் 31 ஜனவரி 2024 அன்று முடிவடைகிறது. வீட்டுக் கடன் சலுகையின் கீழ், SBI வங்கி வீட்டுக் கடன்களில் 65 அடிப்படை புள்ளிகள் (bps) வரை தள்ளுபடி வழங்குகிறது. இந்த தள்ளுபடி Flexipay, NRI, சம்பள வகுப்பு உட்பட அனைத்து வீட்டுக் கடன்களுக்கும் செல்லுபடியாகும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் CIBIL ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும். இப்போது வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்த இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. உங்கள் CIBIL மதிப்பெண் நன்றாக இருந்தால் மட்டுமே வீட்டுக் கடன் வட்டியில் இந்த தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CIBIL மதிப்பெண் (CIBIL Score or Credit Score)


CIBIL மதிப்பெண் என்பது ஒரு தனிநபரின் நிதி நம்பகத்தன்மை மற்றும் வரலாற்றைப் பற்றி கூறும் மூன்று இலக்க எண்ணாகும். உங்கள் கடன் அல்லது கிரெடிட் கார்ட் தொடர்பான நிலுவை தொகைகளை நீங்கள் எவ்வாறு பொறுப்புடன் என்பதையும் CIBIL மதிப்பெண் சொல்கிறது. கடனில் கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்கள் CIBIL ஸ்கோர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு எளிதாக வங்கி உங்களுக்கு கடனை வழங்கும்.


CIBIL மதிப்பெண் & வங்கிகளின் மதிப்பீடு


CIBIL மதிப்பெண் தரவுகளின் மூலம், நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் கொண்டவர் என்பதையும், அதைத் திருப்பித் தருவதில் தாமதம் ஏற்படாது என்பதையும் வங்கிகள் அறிந்து கொள்ளும். அதாவது, வங்கிகள் உங்களுக்குக் கடன் வழங்குவதில் நம்பிக்கையை அளிக்கும் காரணியாகும். பொதுவாக, வங்கிகள் நிர்ணயித்துள்ள தரநிலைகளைப் பார்த்தால், எந்தவொரு நபரின் கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 புள்ளிகள் வரை இருக்கும் மற்றும் 700க்கு மேல் இருந்தால் அது சிறந்த கிரெடிட் ஸ்கோர் (Best Credit Score) ஆக கருதப்படுகிறது.


மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!


CIBIL ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக் கடனில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும்?


750-800 மற்றும் அதற்கு மேற்பட்ட CIBIL மதிப்பெண்களுக்கு சலுகையின் போது வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.60% ஆகும். இதில் 65 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.55 சதவீதம் தள்ளுபடி உள்ளது. 700 முதல் 749 வரையிலான CIBIL மதிப்பெண்ணுக்கு, SBI சலுகையின் போது 0.55 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அப்போது 8.70% என்ற விகிதத்தில் கடன் கிடைக்கும். இருப்பினும், 550-699 வரையிலான CIBIL மதிப்பெண்ணுக்கு தளர்வுகளை வங்கி வழங்கவில்லை. கடனைப் பெற, நீங்கள் 9.45% மற்றும் 9.65% வீதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.


கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க செய்ய வேண்டியவை


உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் அல்லது 700க்கு குறைவாக இருந்தால், அதை மேம்படுத்துவது முக்கியம். இதற்கு முதலில் நீங்கள் ஏற்கனவே வீட்டுக் கடன், தனிநபர் கடன் அல்லது வாகனக் கடன் போன்ற ஏதேனும் கடனைப் பெற்றிருந்தால் அதற்கான உங்கள் EMI அல்லது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்திருந்தாலோ அல்லது செலவு செய்திருந்தாலோ, சரியான நேரத்தில் பணம் செலுத்துவது உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க உதவும். எனவே, உங்கள் CIBIL ஸ்கோரஒ ஒழுங்காக வைத்திருப்பதற்கான சிறந்த வழி, கடன் EMI கட்டணத்தை தாமதப்படுத்தாமல் சரியான நேரத்தில் செலுத்துவதே ஆகும்.


மேலும் படிக்க | பல நிதியமைச்சர்களின் சாதனைகளை பின்தள்ளி முன்னேறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ