Weight Loss Tips: உடல் பருமன் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உலகில் பலர் அதிக எடை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால், நமது தன்னம்பிக்கை குறைந்து, ஆளுமையில் பாதிப்பு ஏற்படுவதுடன் பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. குறிப்பாக தொப்பை மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை கரைப்பது மிக கடினமான ஒரு பணியாகி விடுகின்றது. பலர் உடல் எடையை குறைகக் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உனவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம். உடல் எடையை குறைக்க உதவும் அப்படிப்பட்ட ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நமது சமயலறை மசாலாக்களில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உணவுக்கு சுவையுடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சேர்க்கும் மசாலாக்களில் கருப்பு மிளகும் ஒன்று. குறிப்பாக தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு பெரிய அளவில் உதவுகிறது. கருப்பு மிளகை பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இது தவிர கருப்பு மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொண்டால், உடலை தொற்றுநோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடியும்.
உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு
உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை குறைக்க, காலையில் தனியா மற்றும் கருப்பு மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இரவில் பாலுடன் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் தூள் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வந்தால், சில நாட்களில் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு குறைவதை காண முடியும். மேலும், ரசம், கறிகள், கலந்த சாதங்கள், சாம்பார், குழம்பு என பல வகையான உணவு வகைகளில் கருப்பு மிளகை சேர்ப்பதன் மூலம் உடலில் செரிமான அமைப்பு சீராகும், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இதனால் சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பு கரைந்து உடல் எடையில் வித்தியாசம் தெரியத் தொடங்கும்.
மேலும் படிக்க | உங்களுக்கு குதிகால் வெடிப்புகள் அதிகமாக இருக்கிறதா? குணப்படுத்த வீட்டு வைத்தியம்
Benefits of Black Pepper: கருப்பு மிளகின் பிற நன்மைகள் பற்றி இங்கே காணலாம்
- பழ சாலட், தயிர், சூப் மற்றும் வெறும் தண்ணீருடன் கருப்பு மிளகு கலந்து குடிப்பதால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
- கருப்பு மிளகு நம் உடலில் கொழுப்புகள் அதிகரிக்காமல் தடுக்கிறது.
- இதன் காரணமாக, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது.
- தேநீரில் கருப்பு மிளகை சேர்த்து குடித்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
- இதன் காரணமாக, எடை கட்டுப்பாட்டில் உதவி கிடைக்கும்.
- கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
- கருப்பு மிளகில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
- இதனை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் கிடைக்கிறது.
- இதன் காரணமாக, மனித குடலில் நல்ல பாக்டீரியாவின் தாக்கம் அதிகரிக்கிறது.
- கருப்பு மிளகு டீ குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் தீரும்.
- கருப்பு மிளகு வயிற்று உப்புசம், வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிற வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- குளிர்காலத்தில் இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்தால், கருப்பு மிளகு தேநீர் குடிப்பது மிக நல்லது.
- இது தவிர ஆஸ்துமா பிரச்சனை மற்றும் பருவகால அலர்ஜியை குணமாக்கவும் கருப்பு மிளகு உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த குப்பை உணவுகளுக்கு குட்பை சொல்லுங்கள்...! புத்தாண்டு உறுதிமொழி வெல்லட்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ