புதுடெல்லி: 2019 ஆம் ஆண்டில் சீனாவின் ஹூபே மாகாணமான வுஹானில் இருந்து வெளிவந்த கொரோனா வைரஸின் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் விளைவாக உலகின் அனைத்து நாடுகளிலும் பல விதமான பிரச்சனைகள் உள்ளன. உலகெங்கிலும் 59 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே அச்சம் உச்சத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலைமையைப் பயன்படுத்தி, இணையதள ஹேக்கர்கள் (Hackers) மற்றும் குற்றவாளிகள் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகள் வழியாக COVID-19-ன் பெயரில் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை வகுத்து வருகின்றனர்.


அதிகரித்து வரும் சைபர் குற்றங்களைக் கருத்திக் கொண்டு, சைபர் குற்றவாளிகளால் செய்யப்படும் இத்தகைய மோசடிகளிலிருந்து தங்கள் வாடிக்கையாளர்களைக் காக்க, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களை எச்சரித்து, பல எடுத்துக்காட்டுகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.


i. COVID-19-ஐ சாக்கிட்டு, மோசடி செய்பவர்கள் அரசாங்க அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் (Health Workers) அல்லது சுகாதாரக் குழுக்களின் பிரதிநிதிகளாக மக்களை தொலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை வழங்குவது அல்லது நிதி உதவிக்கு போலி சலுகைகளை வழங்குவது போன்ற தகவல்களை அளித்தால், அந்த தொலைபேசி அழைப்பை தவிர்த்து விடுமாறு வங்கி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது.


ii. மோசடி செய்பவர்கள் கோவிட் -19-ன் பெயரில் நன்கொடைகளை கேட்டு அழைக்கலாம் அல்லது மின் அஞ்சல்களை அனுப்பலாம் என்றும் வங்கி எச்சரித்தது.


iii. SBI தனது வாடிக்கையாளர்களிடம் ஒரு பெரிய புகழ்பெற்ற ஆன்லைன் ஸ்டோரைப் போல காட்டிக்கொண்டு போலி பொருட்களை மலிவான விலையில் விற்கும் நபர்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.


iv. புகழ்பெற்ற நிறுவனங்களின் இலவச சேவை, லாட்டரி, வேலை வாய்ப்புகள், பரிசுகள் பற்றிய அழைப்புகளையோ மின் அஞ்சல்களையோ நம்ப வேண்டாம், எச்சரிக்கை தேவை என வங்கி கேட்டுக் கொண்டது.


v. ஃபிஷிங் செய்திகள் மற்றும் மின் அஞ்சல் பற்றி எச்சரிக்கையில், தெரியாத எஸ்எம்எஸ் / மின்னஞ்சல் / சோஷியல் மீடியா (Social Media) மூலம் பெறப்பட்ட எந்தவொரு அறியப்படாத இணைப்பையும் திறக்க வேண்டாம் என்று வங்கி கேட்டுக்கொண்டது. ஏனெனில் அவை தனிப்பட்ட தரவைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் தீம்பொருளைக் கொண்டிருக்கலாம்.


vi. SBI தனது வாடிக்கையாளர்களிடம் கணக்கு விவரங்கள், ஒன் டைம் கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி கணக்கு தொடர்பான தனிப்பட்ட எதையும் தொலைபேசி அழைப்பு அல்லது அஞ்சல் மற்றும் செய்திகளில் யாருடனும் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாக கேட்டுக் கொண்டது.


ALSO READ: Lakshmi Vilas Bank: இன்று முதல் புதிய பெயருடன் புதிய துவக்கம்


vii. சிக்கல்களைத் தீர்க்க அல்லது வங்கியின் எந்த விவரங்களையும் பெற கூகிள் போன்ற ப்ரௌசர்களை நம்புவதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட SBI வலைத்தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வங்கி கூறியது.


viii. ஏதேனும் மோசடி நடந்தால், வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகிலுள்ள SBI கிளை அல்லது உள்ளூர் போலீஸ் அதிகாரிகளளை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வங்கி கூறியது.


ALSO READ: SBI Annuity Deposit Scheme: மாதாந்திர வருமானத்துடன் பல வசதிகளை வழங்கும் அசத்தல் திட்டம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR