பப்கள் இளைஞர்களை அழிப்பதாகக் குறிப்பிட்ட கர்நாடக பாஜக தலைவர் நலின் குமார் இது தொடர்பாக மாநில அரசு செயல்படத் தவறினால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் இளைஞர் பிரிவை வலியுறுத்துவேன் என்று கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல் கன்னட மாவட்டத்தில், பப்கள் அனைத்தும் மூடப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கமிஷனரிடம்  ஏற்கனவேபேசியுள்ளதாகவும், இது தொடர்பாக மாநில அரசு செயல்படத் தவறினால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாஜக (BJP) கட்சியின் இளைஞர் பிரிவைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.


 கோவிட் -19 காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் மூடப்பட்ட பப்கள், நான்காம் கட்ட அன்லாக் நடவடிக்கையின் கீழ், திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அனைத்து பார்கள் மற்றும் உணவகங்களும் மீண்டும் திறக்கப்பட்டன.


கர்நாடக அரசு மாநிலத்தில் உள்ள பார்கள், விடுதிகள், கிளப்புகள் மற்றும் உணவகங்களில், குறைந்த அலவிலான வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று அனுமதித்தது.  மதுபானங்களை வழங்க அனுமதித்தது.


கடந்த காலங்களிலும், மங்களூர் பப் என்றில்  நடந்த தாக்குதலுக்குப் பின்னர் பப் கலாச்சாரத்தை பாஜக எதிர்த்தது. 2009 ஆம் ஆண்டில், மங்களூர் பப் தாக்குதல் சம்பவத்தில், கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா, மாநிலத்தில் "பப் கலாச்சாரத்தின்" வளர்ச்சி தவறானது, அதை அனுமதிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.


மேலும் படிக்க | பழைய வாகனங்களை மாற்றும் அரசின் திட்டம்; கார், பைக் விலைகள் 30% வரை குறையும்..!!!