பழைய வாகனங்களை மாற்றும் அரசின் திட்டம்; கார், பைக் விலைகள் 30% வரை குறையும்..!!!

அரசு விரைவில், பழைய வாகனங்களை மாற்றுவது தொடர்பான கொள்கையை (Vehicle Scrapping Policy) அடுத்த மாதம் செயல்படுத்த தயாராகி வருகிறது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 20, 2020, 10:36 AM IST
பழைய வாகனங்களை மாற்றும் அரசின் திட்டம்; கார், பைக் விலைகள் 30% வரை குறையும்..!!!

Vehicle Scrapping Policy : பழைய 4 சக்கர வாகனம் (கார்) மற்றும் டூவீலர்ஸ் (ஸ்கூட்டர், பைக்) ஆகியவற்றிற்கான பழைய வாகனங்களை மாற்றுவதற்கான கொள்கையை அடுத்த மாதம் முதல் செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. 

காற்று மாசடைவதை தவிர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஒழிக்க, மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வருகிறது. பழைய வாகனங்களை ஒப்படைத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்க  இந்த புதிய திட்டம் வகை செய்யும்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, பழைய வாகனங்களை மாற்றுவதற்கான வெஹிகிள் ஸ்கிராப்பிங் பாலிஸி (Vehicle Scrapping Policy) விரைவில் நடைமுறைக்கு வரக்கூடும். அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், வி கே சிங் சனிக்கிழமை மாநிலங்களவையில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கைக்கான அமைச்சரவை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.  கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தகுதியற்ற மற்றும் பழைய வாகனங்களை அகற்றுவதற்கான புதிய கொள்கை திட்டத்திற்கான அமைச்சரவை குறிப்பு  தயாராக உள்ளது என்று கூறினார். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால்,  மந்தநிலையையும் சரிவையும் எதிர்கொள்ளும், ஆட்டோமொபைல் துறை மேம்படுவதோடு,  நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் தரும் என்று நம்பப்படுகிறது. 

புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது ஆட்டோமொபைல் துறை ஏற்றம் காணும். வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனங்கள் 30 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும். பழைய வாகனங்கள்  அகற்றப்படுவதால், காற்று மாசுபாடு 25 சதவீதம் குறையும். அதே நேரத்தில், ஸ்கிராப் மையங்களில், அதாவது பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் மையங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

ALSO READ | பென்ஷன் இல்லையே என டென்ஷன் வேண்டாம்...மாதம் ₹14,000 பென்ஷன் பெற வழி இருக்கு..!!!

பழைய காரை ஸ்கிராப்பேஜ் மையத்திற்கு விற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை காண்பித்தால், புதிய காரின் பதிவு இலவசமாக செய்யப்படும். 

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.80 கோடி வாகனங்கள் ஸ்கிராப் கொள்கையின் கீழ் அப்புறப்படுத்தப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொள்கையின் மூலம், நாட்டில் வாகனத்தை பிரித்து அப்புறப்படுத்தும் மையங்கள் பெரிய அளவில் கட்டப்படும். இது அதிக எண்ணிக்கையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதே நேரத்தில், மறுசுழற்சியில் எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் போன்ற பாகங்களை ஆட்டோமொபைல் துறை மலிவாகப் பெற முடியும்.

பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை திட்டம் விரைவில் அமைச்சரவைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, அதை செயல்படுத்தும் செயல்முறை தொடங்கும். தொற்றுநோய் நெருக்கடி நிலவும் இந்த நேரத்தில், ஸ்கிராப் கொள்கை, பொருளாதாரத்திற்கு ஒரு உயிர்நாடியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ALSO READ | Loan moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..!!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR