நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பினால், மியூட்சுவல் எனப்படும் பரஸ்பர நிதிகள் ஒரு நல்ல வழி. SIP (Systematic Investment Plan) மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுதுளி பெருவெள்ளம் என்று சொல்வது உண்மையென்றாலும், சேமிக்கும் சிறுதுளியையும் ஆவியாகாத பாத்திரத்தில் சேமித்தால் தான் அது பெருகும். அதேபோல, புத்திசாலித்தனமான முதலீடுகளே பணத்தை மேலும் ஈட்டித்தரும்.


மாதந்தோறும் ரூ 6000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மில்லியனர் ஆகலாம், பணத்தை முதலீடு செய்வது மிகவும் எளிதானது


தொடர்ந்து செய்யும் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு பலன் கொடுப்பவை. மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம். 


மேலும் படிக்க  அதிர்ச்சி: சேமிப்பு கணக்கின் வட்டி விகிதங்கள் குறைகின்றன


HDFC செக்யூரிட்டிஸின் SIP (Systematic Investment Plan) கால்குலேட்டரின் அடிப்படையில், 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 எஸ்ஐபி செய்தால், 1 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்கலாம்.


ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள எஸ்ஐபி கால்குலேட்டரின்படி, ஒரு முதலீட்டாளர் 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 எஸ்ஐபியில் போட்டு வந்தால், அது கோடிக்கணக்கில் பணத்தை ஈட்டித் தரும். 


ஆனால், அதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதலீடு செய்யும் தீவிரமான முதலீட்டாளராக (aggressive investor) இருக்க வேண்டும், 


20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதலீடு குறைந்தது 1,00,71,684 என்ற அளவில் திரும்பக் கிடைக்கும். இதே தொகையை பாதுகாப்பான வழிகளில் மட்டுமே முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு முதலீட்டாளராக இருந்தால், உங்களுக்கு ரூ.58,06,335 மட்டுமே கிடைக்கும். 



இதே தொகை மிதமான முதலீட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு (ஒவ்வொரு மாதமும் ரூ. 6000 முதலீடு) ரூ. 74,02,679 கிடைக்கும்.


SIP கணக்கீட்டில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்


நீங்கள் தேர்ந்தெடுத்த முதலீட்டு பாணியின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட தொகை கணக்கிடப்படுகிறது. திட்ட கணக்கீட்டில், பழமைவாத முதலீட்டாளர் 12.5% ​​p.a இன் வரிக்கு முந்தைய விகிதத்தில் கணிக்கப்படுகிறார்.


இதுவே  மிதமான முதலீட்டாளர்களுக்கு 14.5% p.a. ஆகவும், தீவிரமான முதலீட்டாளர்களுக்கு (Investment on regular basis) 17% p.a. ஆகவும் கருதப்படுகிறது. எனவே, நீங்கள் எந்த முதலீடு செய்தாலும், உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கவும் என்றும் HDFC செக்யூரிட்டீஸ் கூறுகிறது.


SIP மூலம் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான வழி


நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பினால், பரஸ்பர நிதிகள் ஒரு நல்ல வழி. நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அது பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது. 


SIP முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இது சிறிய சில்லறை முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய நிதியை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.


மேலும் படிக்க | தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு உள்ளதா இதோ உங்களுக்காக பல்வேறு வசதிகள்.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR