வெறும் ரூ.5000 முதலீட்டில் மாதந்தோறும் ரூ.35,000 பெற அறிய வாய்ப்பு!
20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர எஸ்ஐபி செய்தால், ஒவ்வொரு மாதமும் 35 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.
ஒரு நபர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையின் தேவைக்காக என்ன செய்வது என்பது பற்றிய கவலை அவர்களிடத்தில் உருவாக தொடங்கிவிடுகிறது. ஓய்வுக்கு பின்னர் வரும் செலவுகளை எதிர்கொள்ள ஒவ்வொரும் பல்வேறு வகையான முதலீடு திட்டங்களை நாடுகின்றனர், அப்படி தேர்ந்தெடுக்கும் முதலீட்டு முறைகள் பாதுகாப்பானதா என்பது குறித்த சிறு ஐயமும் மக்கள் மனதில் இருக்கிறது. இதுவரை ரிடையர்மென்ட் பிளானிங் பற்றி முடிவு செய்யாதவர்கள் இனிமேலாவது இதுபற்றி முடிவெடுங்கள். அவ்வாறு நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகையை நீங்கள் ஓய்வூதியமாகப் பெற்று ஓய்வுக்கு பின்னர் ஏற்படும் செலவுகளை சமாளிக்கலாம்.
நீங்கள் முதலீடு செய்ய்யக்கூடிய பாதுகாப்பான திட்டமாக எஸ்டபுள்யூபி-ஐ தேர்ந்தெடுக்கலாம், இந்த முதலீடு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து ஒரு நிலையான தொகையை திரும்பப் பெற உதவுகிறது. இதில் எப்போது, எவ்வளவு நபணம் எடுக்கலாம் என்பதை முதலீட்டாளரே தீர்மானிக்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, 6 மாதங்கள் அல்லது ஆண்டு அடிப்படையில் உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின்படி, 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர எஸ்ஐபி செய்தால், ஒவ்வொரு மாதமும் 35 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.
எஸ்டபுள்யூபி-ன் சிறந்த நன்மை இதை எப்போதும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு உபரி பணம் இருந்தால், அதைப் பெற்றுக்கொள்ளலாம். இதுமட்டுமல்லாது ஈக்விட்டி மற்றும் டெட் ஃபண்டுகளில் உள்ளதைப் போலவே வரியும் பொருந்தும். இதில் 12 மாதங்களுக்கு மிகாமல் இருந்தால், முதலீட்டாளர்கள் குறுகிய கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
எஸ்ஐபி-ல் ரூ 5000 முதலீடு செய்வதன் மூலம் நாம் பெறப்படும் தொகை பற்றி கீழே பார்க்கலாம்.
- எஸ்ஐபி 20 ஆண்டுகள் வரை
- மாதாந்திர எஸ்ஐபி ரூ.5000
- பதவிக்காலம் 20 ஆண்டுகள்
- மதிப்பிடப்பட்ட வருவாய் 12%
- நிகர மதிப்பு ரூ 50 லட்சம்
20 வருட எஸ்டபுள்யூபி :
- பல்வேறு திட்டங்களில் முதலீடு 50 லட்சம்
- மதிப்பிடப்பட்ட வருவாய் 8.5%
- ஆண்டு வருமானம் ரூ.4.25 லட்சம்
- மாத வருமானம் 4.25 லட்சம்/12 = ரூ 35417
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ