அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. மத்திய அரசுக்குப் பிறகு, பல மாநிலங்களும் டிஏவை (அகவிலைப்படி) உயர்த்தியுள்ளன. பல மாநிலங்களின் ஊழியர்களின் டிஏ மத்திய ஊழியர்களின் 34%க்கு சமமாக உள்ளது. தற்போது மகாராஷ்டிரா அரசும் தனது ஊழியர்களுக்கு பெரும் செய்தியை அளித்துள்ளது. இதற்கு முன், ஊழியர்களின் கணக்கில் இரண்டு தவணைகள் ஏற்கனவே இந்த அரசு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஜூன் மாதத்திலேயே மூன்றாவது தவணையை அனுப்பத் தொடங்கியுள்ளது. மூன்றாவது தவணை ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குள் ஊழியர்களின் கணக்கில் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி 7வது ஊதியக்குழுவின் கீழ் மூன்றாம் தவணை நிலுவைத் தொகையை வழங்க மகாராஷ்டிர அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் எப்படிச் செலுத்தப்படும்?
கடந்த 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில், மாநில அரசு ஊழியர்களுடன் இணைந்து ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 5 ஆண்டுகளில் மற்றும் 2019-20 ஆம் ஆண்டு முதல் ஐந்து தவணைகளில், ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது. இதன் கீழ், இதுவரை ஊழியர்களுக்கு 2 தவணைகள் கிடைத்துள்ளன. இப்போது மூன்றாவது தவணை கணக்கில் வர ஆரம்பித்துவிட்டது.
மேலும் படிக்க | 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளம் உயரப்போகிறதா?
எனவே நீங்கள் மகாராஷ்டிரா அரசு ஊழியராக இருந்தால், உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும். இதன் கீழ் ஊழியர்களில் உள்ள குரூப் ஏ அதிகாரிகளுக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பலன் கிடைக்கும். அதே சமயம் குரூப் பி அதிகாரிகளுக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பலன் கிடைக்கும். இதன் கீழ், குரூப் சி நபர்களுக்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாயும், நான்காம் பிரிவினருக்கு 8 முதல் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மத்திய அரசுத் துறைகளில் 8வது ஊதியக் குழு குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. எட்டாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றத்தை காண முடியும். தற்போது, 7வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள ஊழியர்களின் அடிப்படை சம்பளம் (குறைந்தபட்ச ஊதிய வரம்பு) ரூ.18,000 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ், அதிரடி ஊதிய உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ