Business Idea Tamil: இன்றைய இளைஞர்கள் பலர் வேலைக்கு செல்வதை விட சுய தொழில் தொடங்குவதை விரும்புகிறார்கள். பலர், ஒருவருக்கு கீழ் நின்று வேலை செய்வதை விரும்பாததே இதற்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து வரும் லாபம், அவர்களின் வேலையில் இருந்து வரும் சம்பளத்தை விட பன்மடங்கு அதிகமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த தொழிலை எடுத்தாளும் அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும், லாப-நஷ்டங்கள் இருக்கும். ஆனால், எந்த நேரத்தில் தொடங்கினாலும், எப்போது ஆரம்பித்தாலும், நஷ்டம் ஏற்படாத தொழில்களுள் ஒன்று, உணவு. அதிலும் இந்தியாவில் உணவு பிரியர்கள் பலர் உள்ளனர். இந்த தொழிலில் குறைவாக முதலீடு செய்தாலும், நல்ல லாபத்தை பார்க்கலாம். தற்போது, சம்மர் சீசன் தொடங்கி விட்டது. இந்த சீசனில் நன்றாக வியாபரம் ஆகும் உணவு தாெழிலாக இருப்பது, ஜூஸ்-ஐஸ் போன்றவைதான். இந்த தொழிலை தொடங்குவதால் எவ்வளவு லாபம் பார்க்கலாம்? இங்கு பார்ப்போம். 


ஜூஸ் பிசினஸ்:


சராசரி உணவுகளில், அதிக ஹெல்தியான நற்பலன்களை கொண்டுள்ளது, பழங்கள் மற்றும் காய்கறிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இவை, நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் உடலில் நீரேற்ற சத்துகளை அதிகரிக்கலாம். சமீப காலமாக, பலர் ஹெல்தியான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். அப்படி இருக்கும் ஹெல்தி பிரியர்கள் மத்தியில் ஜூஸ் வியாபாரத்தை தாெடங்கினால், அது கண்டிப்பாக பல மடங்கு வியாபாரத்தை ஈட்டுத்தரும். ஜூஸ் கடைகலில், பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் மட்டுமன்றி, மில்க் ஷேக்ஸ், ஆரோக்கிய பானங்கள் ஆகியவற்றையும் விற்கலாம். சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், இந்த கடையை வெயில் காலத்தில் ஆரம்பிக்கலாம். 


மேலும் படிக்க | Virtual ATM: இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்-அருகில் இருக்கும் கடைக்கு போனாலே போதும்!


ஜூஸ் கடையை திறக்க என்ன செய்ய வேண்டும்? 


>ஜூஸ் கடையை தொடங்க, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போர்ட் உள்ளிட்டவற்றிடம் முதலில் அனுமதி பெற வேண்டும். 
>அனுமதிகளை பெற்ற பிறகு, ஜூஸ் கடையை தொடங்கும் இடம் எது என்பதை தேர்வு செய்ய வேண்டும். 
>சொந்தமாக இடம் வாங்கி தொடங்க வேண்டுமா அல்லது வாடகைக்கு அந்த இடத்தை எடுக்க வேண்டுமா ஆகியவற்றை உங்களின் முதலீட்டை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.
>அதிக போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தை இதற்காக தேர்வு செய்யலாம். 


யார் யாரினால் லாபம் ஏற்படும்? 


>ஹெல்தி பிரியர்களிடையே ஜூஸ் வியாபாரம் அபாரமாக நடைபெறும். 
>கல்லூரி-பள்ளிகள் இருக்கும் இடங்களில் ஜூஸ் கடை ஆரம்பித்தால் அதிகம் லாபம் வரும். 
>ஜிம், மக்கள் வாக்கிங் செல்லும் இடங்களில் ஜூஸ் கடை திறக்கலாம். 


முதலீடு-லாபம் எவ்வளவு?


ஜூஸ் கடையினால் வரும் லாபம்,  நீங்கள் தேர்வு செய்யும் இடத்தை பொறுத்து மாறும். ஆனாலும், நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் இருந்து 50 முதல் 70 சதவிகிதம் வரை லாபம் ஈட்டலாம். ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் ஜூஸ் கடையில் 10 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், அதில் 5 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்டலாம். 


வாடிக்கையாளர்களை அதிகரிப்பது எப்படி? 


>ஜூஸ்களுக்கு காம்போ ஆஃபர் கொடுப்பது.
>தள்ளுபடி கொடுப்பது
>மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வியாபரத்தை தொடங்குவது. 


மேலும் படிக்க | EPFO Pension Rules: கணவனுக்கு பின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ