EPFO Pension Rules: கணவனுக்கு பின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

EPFO Pension Rules: ஒரு பணியாளருக்கு அவரது பணி ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணி ஓய்விற்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம் தொடர்பாக ஊழியர்களிடையே பல கேள்விகள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2024, 09:10 AM IST
  • ஊழியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கிறது?
  • குடும்பத்திற்கு உதவும் EPF தொகை.
  • ஊழியரின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?
EPFO Pension Rules: கணவனுக்கு பின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

EPFO Pension Rules: இபிஎஃப்ஓ சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாத சம்பளம் வாங்கும் அனைவரும் ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை இபிஎஃப் கணக்கில் (EPF Account)சேமிக்கிறார்கள். அதேபோல் அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் அதே அளவு பங்களிப்பை அளிக்கின்றது. இந்த இபிஎஃப் கணக்குகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. தனியார் துறைகளில் (Private Sector) பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி ஓய்விற்கான வயது வரம்பு 58 ஆக உள்ளது. ஒருவர் ஒரு நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு பணியாற்றி இருந்தால் கூட ஓய்வூதியம் பெற தகுதி உடையவர் ஆகிறார். 

Add Zee News as a Preferred Source

ஒரு பணியாளருக்கு (Employee) அவரது பணி ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணி ஓய்விற்கு பிறகு கிடைக்கும் ஓய்வூதியம் தொடர்பாக ஊழியர்களிடையே பல கேள்விகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது ஒரு பணியாளர் 58 வயதுக்கு பிறகு மரணமடைந்தால், அந்த பணியாளரின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்பதுதான். இது பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

குடும்பத்திற்கு உதவும் EPF தொகை

பணி ஓய்வுக்குப் (Retirement) பிறகு வாழ்க்கையை நிதி பற்றாக்கறை இல்லாமல் கழிப்பதற்காகவே பெரும்பாலான ஊழியர்கள் EPF-ல் டெபாசிட் செய்கிறார்கள். எனினும், பல சமயங்களில் துரதிஷ்டவசமாக உடல்நிலை குறைவால் சிலர் அகால மரணம் அடைவதும் உண்டு. அப்படிப்பட்ட தருணங்களில் EPF மூலம் கிடைக்கும் தொகை அந்த நபரின் குடும்பத்திற்கு மிக உதவியாக இருக்கிறது.

ஊழியரின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

ஒரு ஊழியர் 58 வயதிற்குப் பிறகு மரணமடைந்தால் அவரது மனைவிக்கு அந்த நபரின் ஓய்வூதியத்தை பெறுவதற்கான உரிமை உள்ளது. இந்த சூழலில் நாமினிக்கு முழு தொகையும் கிடைக்கும். பணியாளர் பணி ஓய்வு பெற்ற பின் மரணம் அடைந்தால் அவரது மனைவிக்கு ஓய்வூதியத் தொகையில் பாதி தொகை கிடைக்கும். பணியாளரின் இறப்புக்கும் அவர் ஓய்வு பெற்ற தேதிக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், ஓய்வூதியத் தொகை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விதவைகளுக்கான (Widow) ஓய்வூதிய தொகை ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஊழியர் மரணம் அடைந்தால் அவரது மனைவிக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மேலும் படிக்க | Virtual ATM: இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்-அருகில் இருக்கும் கடைக்கு போனாலே போதும்!

இபிஎப் மூலம் கிடைக்கும் ஓய்வூதியம்

தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓய்வுதியும் வழங்கும் பொறுப்பு EPFO இடம் உள்ளது. EPF என்பது ஒருவிதமான வருங்கால வைப்பி நிதியாகும். இது பொருளாதார ரீதியாக வல்லமை பெற ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகின்றது. நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கிறது. ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் மூலம் செலுத்தப்படும் இந்த தொகை ஊழியர்களின் ஓய்விற்கு பிறகு அவர்களுக்கு ஓய்வூதியம் (Pension) வழங்க உதவுகிறது.

ஊழியர்களுக்கு எப்போது ஓய்வூதியம் கிடைக்கிறது?

ஊழியர்களின் ஓய்வூதிய வயது வரம்பை அரசாங்கம் 58 ஆக நிர்ணயத்துள்ளது. ஊழியர்கள் பங்களிக்கும் தொகை முழுவதுமே EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. நிறுவனம் பங்களிக்கும் தொகையின் ஒரு பகுதி ஊழியர்களின் EPF கணக்கிலும் மற்றொரு பகுதி பணியாளர் ஓய்வூதிய திட்டமான EPS கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகின்றது. ஒரு ஊழியர் ஓய்வூதிய வயதான 58 -ஐ அடையும் போது இந்த நிதியிலிருந்து மொத்த தொகையை எடுத்துக் கொள்ளலாம். பிஎஃப் கணக்கிலிருந்து ஊழியர்கள் மொத்தமாக பணத்தை எடுக்கலாம், எனினும், இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது

மேலும் படிக்க | வீட்டுக் கடன், வாகன கடன் EMI குறைய வாய்ப்பு உள்ளதா... நிபுணர்கள் கூறுவது என்ன..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News