சாலையில் எளிதாக பயணம் செய்யவும், வசதியாக பயணம் செய்யவும் சிறப்பான ஒரு போக்குவரத்து வசதி இரு சக்கர வாகனங்கள் ஆகும்.  பலருக்கும் பைக் ஓட்டுவது தான் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது, இருசக்கர வாகனங்களுக்கு கடன் பெறுவது என்பது நமக்கு பிடித்தமான பைக்கை வாங்கும் கனவை பூர்த்தி செய்கிறது.  இதுகுறித்து ஓடிஓ-ன் இணை நிறுவனர் சுமித் கூறுகையில், 'முன்னர் நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்காக தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருந்தவர்கள், தற்போது இருசக்கர வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் என்பிஎஃப்சி போன்ற கடன் வழங்குபவர்கள் எளிதான கடன் ஆப்ஷன்களை கொண்டுள்ளதால் பலரும் இருசக்கர வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Fixed Deposit Rules: FD தொடர்பான விதிகளை RBI மாற்றியுள்ளது


இருசக்கர வாகங்களுக்கு கடன் வாங்கும்போது செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் குறித்து கவனத்தில் கொள்ளவேண்டும்.  இதுகுறித்து சுமித் கூறுகையில், 'இரு சக்கர வாகனங்களுக்கு நிதியுதவி செய்வதற்கான தேவை அதிகரித்து வருவதால், கடன் வழங்குபவர்களான என்பிஎப்சி-கள் நியாயமான அளவுகளில் கடன் வழங்க ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன.  ஒருவர் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து அவர்களின் வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் வரை இருக்கும்.  80 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான எல்டிவி நல்லதாகக் கருதப்படுகிறது.  உதாரணமாக, நீங்கள் ரூ. 100,000 மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை வாங்கும்போது, உங்கள் எல்டிவி 80 சதவீதமாக இருந்தால், உங்கள் கடன் தொகை ரூ. 80,000 ஆக இருக்கும், மேலும் நீங்கள் 20 சதவீதத்தை செலுத்த வேண்டும் அதாவது வாகனத்திற்கு முன்பணமாக ரூ.20,000 செலுத்த வேண்டும்.


கடன் தொகையை திருப்பிச் செலுத்த எந்தவொரு நிதி நிறுவனமும் கடன் வாங்குபவருக்கு ஒரு கால அளவை வழங்கும், இது பொதுவாக 12 - 48 மாதங்கள் வரை இருக்கும்.  இதனை நாம் இஎம்ஐ மூலம் ஒவ்வொரு மாதமும் செலுத்திக்கொள்ளலாம், இஎம்ஐ என்பது ஒவ்வொரு மாதமும் செலுத்தும் அசல் தொகை மற்றும் வட்டியின் ஒரு பகுதியாகும்.  தற்போது சுலபமாக இரு சக்கர வாகனக் கடனை உடனே பெறுவதற்கான சில எளிய உதவிக்குறிப்புகளை காண்போம்.


1) ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் கடன் பெறுவதற்கென்று உள்ள விண்ணப்பங்களில் சரியான  விவரங்களை நிரப்புவதன் மூலம் கடன் வாங்குவதற்கான செயல்முறை தொடங்குகிறது.  இந்த செயல்முறை எளிதாக தோன்றினாலும் விண்ணப்பத்தில் நாம் ஏதேனும் தவறு செய்திருந்தால் நாம்மால் உடனடியாக கடன் பெற்றுவிட முடியாமல் போகக்கூடும்.  அதனால் நாம் கவனமாக விவரங்களை நிரப்ப வேண்டும்.



2) உங்கள் இரு சக்கர வாகனக் கடனை உடனடியாக ஏற்றுக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய முதல் மற்றும் முக்கிய படி இதுவாகும். விண்ணப்பதாரரின் தகுதியைச் சரிபார்க்க வெவ்வேறு கடன் வழங்குநர்கள் வெவ்வேறு அளவுகோல்களைக் கொண்டுள்ளனர்.   அவை என்னவென்றால் உங்களிடம் நிலையான குடியிருப்பு முகவரி இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு இந்திய குடிமகனாகவும் இருக்க வேண்டும்.  அடுத்ததாக ஒரு விண்ணப்பதாரர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், கடன் முதிர்வின் போது அதிகபட்சமாக 65 வயதாகவும் இருக்க வேண்டும். 
 மேலும் நிலையான வேலை நிலை அல்லது நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், உங்கள் நிறுவனத்தின் ஐடி ரிட்டர்ன்களை கடன் அளிப்பவரிடம் கொடுக்க வேண்டும்.


3) KYC செயல்முறையை உறுதிப்படுத்த, நீங்கள் ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இந்த ஆவணங்களில் அடையாளச் சரிபார்ப்புக்காக ஐடி மற்றும் முகவரிச் சான்று, அதேபோன்ற சம்பளச் சீட்டுகள், ஐடி வருமானம் மற்றும் உங்கள் வழக்கமான வருமானத்தை உறுதிப்படுத்தும் வங்கி அறிக்கைகள் ஆகியவற்றை சரிபார்ப்புக்கு கொடுக்க வேண்டும்.


4) அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ-க்கு செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிட வேண்டும். தவணைக்காலம், அசல் தொகை மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றைப் பொறுத்து இஎம்ஐ மதிப்பிடுவதற்கு ஆன்லைனில் உள்ள இஎம்ஐ கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | EPFO ஓய்வூதியத் திட்டம்: இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR