தங்கம் வெள்ளி விலையில் கடும் சரிவு.. காரணம் என்ன.. மேலும் விலை குறையுமா..!!!
பண்டிகை காலம் என்பதால், இது தங்க நகை வாங்க ஏற்ற நேரம் தான். அதனால் தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகவும் குறைந்து வருகிறது.
இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
பண்டிகை காலம் என்பதால், இது தங்க நகை வாங்க ஏற்ற நேரம் தான். அதனால் தொடர்ந்து விலை குறைந்து வருவது நகை வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
கொரோனா (Corona) பரவல் தீவிரம் ஆன பிறகு, தங்கத்தில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொழில்துறைகள் முடங்கியதாலும், டாலர் மதிப்பில் ஸ்திரத்தன்மை இல்லாததாலும் தங்கம் விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ₹40,000ஐ நெருங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, அதாவது 22 கேரச் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹72 குறைந்து ₹37,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹9 குறைந்து ₹4,713க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்னும் சில தினங்களுக்கு ஏற்ற இறக்கம் காணப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அமெரிக்காவில் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், தேர்தலி யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள், ஆகியவை காரணமாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கம் காணப்படும். எனினும் நீண்டகாலத்தை பற்றி குறிப்பிடும் போது, தங்கத்தின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | Good News: கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe