Budget 2024 Date and Time: இடைக்கால பட்ஜெட் தாக்கல், முழு அட்டவணை இதோ
When is Budget 2024-25: யூனியன் பட்ஜெட் இன்னும் 2 நாட்களில் தாக்கல் ஆகப்போகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது ஒரு இடைக்கால பட்ஜெட் ஆகும். மேலும் லோக்சபா தேர்தலுக்கு முன், நிதியமைச்சர் பல திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட் 2024-25: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி லோக்சபா தேர்தல் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் நிதி உதவி திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு. எனவே மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும், எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படும், பட்ஜெட் உரையை எங்கு நேரடியாகப் பார்க்கலாம்? என்கிற கேள்விகளுக்கான பதிலை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.
2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?
பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (FM Nirmala Sitharaman) தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இது முழுமையான பட்ஜெட்டாக இருக்காது. இது ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையும் அதே நாள் பட்ஜெட்டு தாக்கல் செய்யப்படும்.
மேலும் படிக்க | Budget 2024: சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்தின் மீதான வரி விலக்கு அதிகரிக்கலாம்!
இடைக்கால பட்ஜெட் எப்போது தொடங்கும்?:
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நேரம் பொதுவாக காலை 11 மணி ஆகும். அதன்படி அதே நேரத்தில் இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இம்முறை பட்ஜெட் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் ஏனெனில், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அனைவரின் பார்வையும் பட்ஜெட்டின் மீது இருக்கும். எனவே சீதாராமன் சலுகைப் பெட்டியைத் திறந்து நிவாரணம் அளிப்பார் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
யூனியன் பட்ஜெட்டை நேரலையில் எங்கு பார்ப்பது?
யூனியன் பட்ஜெட்டை நீங்கள் நேரலையில் பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இதைக் காணலாம்.
- தூர்தர்ஷன்
- சன்சத் தொலைக்காட்சி
- நிதி அமைச்சகத்தின் YouTube சேனல்
- பல்வேறு செய்தி சேனல்கள்.
நாளை கூடும் நாடாளுமன்றம்- டெல்லி அனைத்துக் கட்சி கூட்டம்:
இதனிடையே 17வது லோக்சபா இறுதி கூட்டத் தொடர் நாளை முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் நாளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைக்கக் கூடும். இதனால் சபை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்தும் வகையில் இன்று டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தற்போது மத்திய அரசு நடத்தி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ