யூபிஐ கட்டண முறை மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது, பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் இந்த கட்டண முறை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  பலரின் விருப்பமான கட்டண முறையாக மாறியுள்ள இந்த யூபிஐ பற்றி இந்திய பிரதமரும் கூறியுள்ளார்.  இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், நாட்டின் டிஜிட்டல் வாலட் பரிவர்த்தனைகள், பண பரிவர்த்தனையை முந்திவிடும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.  மேலும் கூறுகையில், 'யுபிஐ மூலம் செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கட்டண முறை மிகவும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கிறது," என்றும் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சாட்ஜிபிடி-க்கு போட்டியாக எலான் மஸ்க் உருவாக்கும் புதிய ஏஐ - நாளுக்கு நாள் எகிறும் போட்டி 


யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் எளிமையான செயல்முறை என்றாலும் இதில் சில சமயம் சிலருக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  யூபிஐ பரிவர்த்தனையைச் செயல்படுத்தும்போது அல்லது பேடியம், கூகுள் பே மற்றும் போன்பே உள்ளிட்ட யூபிஐ பயன்பாட்டை பயன்படுத்தும்போது நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், இந்திய தேசிய கட்டணக் கழகத்தில் (என்பிசிஐ) புகார் அளிக்கலாம்.  யூபிஐ பயனர்கள் புகார்களைத் தாக்கல் செய்ய என்பிசிஐ-ன் அதிகாரபூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.  இப்போது எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கெல்லாம் என்பிசிஐ-ல் புகார் அளிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.


1) வணிகர்கள் அல்லது மற்றொரு நபருடன் டிரான்ஸாக்ஷன் செய்யும்போது சிக்கல்கள் ஏற்பட்டால் என்பிசிஐ-ல் புகாரளிக்கலாம்.  உதாரணமாக மற்றொரு கணக்கிற்கு மறைமுகப் பரிமாற்றம், பரிவர்த்தனை தோல்வியடைந்தும் பணம் டெபிட் செய்யப்படுவது, வரம்பு மீறப்பட்டது, பரிவர்த்தனை நிலுவையில்/ நிராகரிக்கப்பட்டது மற்றும் பரிவர்த்தனை நேரம் முடிந்தது போன்ற பிரச்சனைகளுக்கு புகார் அளிக்கலாம். புகாரை பதிவு செய்யும் போது வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனை ஐடி, வங்கி விவரங்கள், பரிவர்த்தனை மதிப்பு, தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 


2) யூபிஐ பின்னை அமைக்க முடியாத பயனர்கள், ஃபேஸ் பின் எரர் மற்றும் பிளாக்ட் பின் போன்ற பிரச்சனைகளுக்கு, விர்ச்சுவல் பேமெண்ட் அட்ரஸ், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுடன் தங்கள் புகாரை என்பிசிஐ-ல் பதிவு செய்யலாம்.


3) என்பிசிஐ வாடிக்கையாளர்களால் கணக்குகளைப் பெறவோ அல்லது இணைக்கவோ முடியவில்லை என்றாலோ, யூபிஐகளை அகற்றவோ அல்லது பதிவுசெய்யவோ முடியவில்லை என்றால் புகார்களைப் பதிவுசெய்யலாம்.  லாக் இன் பிரச்சனை, ரிஜிஸ்ட்ரேஷன் பிரச்சனை போன்றவற்றிற்கும் நீங்கள் என்பிசிஐ-ல் புகார் தெரிவிக்கலாம்.  இதுதவிர யூபிஐ பரிவர்த்தனையைச் செயல்படுத்த ஓடிபிகளைப் பெறவில்லை என்றாலும் நீங்கள் என்பிசிஐ-ல் புகார்களை பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ