Warning! வங்கிகளின் இன்று முதல் மாறுதல்கள்; என்னென்ன மாற்றங்கள்? இதோ...
அக்டோபர் 1, இன்று முதல் நிதி மற்றும் வங்கி தொடர்பான விதி மாறுதல்கள் அமலுக்கு வந்தன
புதுடெல்லி: உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் சில மாறுதல்கள் தொடங்கும் நாள் இன்று, இன்று அக்டோபர் 1. எனவே, இந்த நாள் முக்கியமான நாள்.
மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், புதிய விதிகளிலிருந்து உங்களுக்கு விலக்குக் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளாவிட்டால், உங்களுக்கு நிதி இழப்பும் ஏற்படலாம். இந்த விதி மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டை பாதிக்கும் என்பதோடு, வீட்டின் பட்ஜெட்டிலும் துண்டு விழச் செய்யலாம். எனவே இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.
நிதி மற்றும் வங்கி தொடர்பான விதி மாறுதல்கள், ஓய்வூதிய பயனைப் பெற ஆயுள் சான்றிதழ் கொடுப்பது, டெபிட்-கிரெடிட் கார்டுகள், ஏடிஎம்கள் என பல்வேறு மாறுதல்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
சில வங்கிகளின் காசோலை புத்தகங்களில் மாற்றம் ஏற்பட்டால், உணவு வணிக ஆபரேட்டர்களுக்கான புதிய விதிகளும் மாறுகின்றன.
Also Read | Dish TV விவகாரத்தில் தான் வீசிய வலையில் தானே சிக்கிய YES Bank மற்றும் IiAS
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் நேற்றுடன் காலாவதியாகிவிட்டன.
எனவே, இந்த மூன்று வங்கிகளின் காந்த மை எழுத்து அங்கீகாரம் எனப்படும் MICR மற்றும் இந்திய நிதி அமைப்பு குறியீடு IFSC ஆகியவை இன்று முதல் செல்லாது.
அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பழைய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இன்னும் யாராவது புதிய காசோலை புத்தகத்தைப் பெறவில்லை என்றால், உடனடியாக அருகிலுள்ள வங்கிக் கிளையை அணுகவும்.
Also Read | SBI Door Step Banking: இனி உங்கள் வீடு தேடி பணம் வரும்
ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து 5,000 ரூபாய்க்கும் அதிகமான டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது மொபைல் வாலெட்டுகளுக்கு கூடுதல் அங்கீகாரத்தை கோர வேண்டும்.
இதன் கீழ், வாடிக்கையாளர் ஒப்புதல் அளிக்காத வரை, டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது மொபைல் வாலட்களில் இருந்து தானாக பணம் செலுத்தப்படும் வசதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோ டெபிட் செய்தியை 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்ப வேண்டும்.
Also Read | SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர் 1 முதல், 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் வசதியைப் பெறுவார்கள்.
இதற்காக, நவம்பர் 30, 2021 வரை நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் சான்றிதழ் நாட்டில் உள்ள தபால் நிலையங்களின் ஜீவன் பிரமன் மையங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஓய்வூதியதாரர், தான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் தாக்கல் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு. ஓய்வூதியம் தொடர்ந்து கொடுக்கப்படும்.
ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், இரண்டாவது டெபிட் கார்டைப் பெற ஜிஎஸ்டியுடன் சேர்த்து 300 ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல், ஏடிஎம் பின் தொலைந்துவிட்டால், நகல் பின் பெறுவதற்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். சேமிப்பு கணக்கில் நிதி பற்றாக்குறை காரணமாக ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனை குறைந்துவிட்டால், வாடிக்கையாளர் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 20 ரூபாய் செலுத்த வேண்டும்.
Also Read | Bank fraud: ரூ.100 கோடி வங்கி மோசடியில் 2 வெளிநாட்டவர்கள்- சிபிஐ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
https://www.facebook.com/ZeeHindustanTamil
https://twitter.com/ZHindustanTamil