Income Tax: வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் நிதியாண்டின் கடைசி மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் நாம் வரி தாக்கல் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கின்றன. வரி தாக்கல் தொடர்பாக வருமான வரித்துறை (Income Tax Department)அளிக்கும் செய்திகளையும் புதுப்பிப்புகளையும் கவனித்துக்கொண்டே இருப்பது மிக முக்கியமாகும். அந்த வகையில், பழைய மற்றும் புதிய வரி முறை தொடர்பான ஒரு முக்கிய தகவல் உள்ளது. வரி செலுத்தும் நபர், நடப்பு நிதியாண்டில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்து, இப்போது அவர் பழைய வரி முறைக்கு மாற விரும்பினால், அதற்கு ஒரு புதிய படிவத்தை நிரப்ப வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய படிவத்தை நிர்ப்புவது மட்டுமின்றி, இதற்கு கூடுதலாக ஒரு தனி செயல்முறையையும் நிறைவு செய்ய வேண்டும். இதற்கான வசதியை வருமான வரித்துறை வழங்கியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


வருமான வரி அறிக்கை படிவங்கள்


வரி செலுத்துவோருக்கு, 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை படிவங்களை (Income Tax Return Forms) வருமான வரித் துறை சமீபத்தில் வெளியிட்டது. இதில் வரி விலக்கு கோரிக்கைகளுக்கான அறிக்கை படிவங்கள் மற்றும் படிவம்-10-IEA ஆகியவை உள்ளன. புதிய வரி முறையிலிருந்து (New Tax Regime) பழைய வரி முறைக்கு மாற விரும்பும் வரி செலுத்துவோர் இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். இதை நிரப்பாவிடால், வரி செலுத்துவோர் புதிய முறையை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்பட்டும். அதன் பிறகு, அதற்கேற்ப வரி கணக்கிடப்படும். 


வருமான வரி (Income Tax) செலுத்தும் அனைவருக்கும் புதிய வரி முறை இப்போது இயல்புநிலை வரி அமைப்பாக அதாவது டீஃபால்ட் வரி அமைப்பாக உள்ளது. இதிலிருந்து பழைய வரி முறைக்கு (Old Tax Regime) மாற இந்த படிவத்தை நிரப்புவது அவசியமாகும். 


புதிய படிவத்தில் நிரப்ப வேண்டிய தகவல்கள்


பழைய வரி முறைக்கு மாற விரும்பும் வரி செலுத்துவோர் (Taxpayers), புதிய 10-ஐஇஏ (10-IEA form) படிவத்தில் பல்வேறு விவரங்களை நிரப்ப வேண்டும். இதில் பான் எண், வரி செலுத்திய முழு விவரங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இது தவிர, இரண்டு வரி முறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் வரலாறு குறித்தும் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும்


மேலும் படிக்க | கார்களையும் டிரக்கையும் திரும்பப் பெறும் முடிவுக்கு டொயோட்டா வந்ததன் பின்னணி!


Form 10-IEA என்றால் என்ன?


டீஃபால்ட் முறையின் கீழ், புதிய வரி முறை ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. பழைய முறையில் அதிக வரி விலக்கின் பலனைப் பெற முடியும் என ஒருவருக்கு தோன்றினால், அவர் அதற்கு மாறலாம். படிவம் 10-ஐஇஏ இதற்கான அறிவிப்பு படிவம் போன்றது. 


புதிய வரி முறை


நூற்றுக்கணக்கான வரி செலுத்துவோர் பழைய முறையிலிருந்து புதிய முறைக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு முறைகளிலும் சில ஆதாயங்களும், சில நஷ்டங்களும் உள்ளன. எந்த வரி முறையை தேர்ந்தெடுப்பது என்பது ஒவ்வொருவருக்கும், அவரது நிதி வருவாய், செலவுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடலாம் என வரி நிபுணர்கள் கூறுகிறார்கள்.


படிவத்தை சம்ர்ப்பிப்பதற்கான கடைசி தேதி எது?


பழைய வரி முறைக்கு மாறுவதற்கான இந்த படிவத்தை வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) செய்ய கடைசி நாளான ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில், டிசம்பர் 31 வரை தாமத வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம். எனினும் அப்படி செய்பவர்களால் பழைய வரி முறையைத் தேர்வு செய்ய முடியாது.


மேலும் படிக்க | சம்பளத்தில் பிடிக்கப்படும் தொகை பிஎஃப் கணக்கில் டெபாசிட் ஆகுதா? இப்படி ஈசியா செக் செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ