இந்த அளவுக்கு மேல் சேமிப்பு கணக்கில் இருந்தால் பிரச்சனை: வருமான வரி விதிகளை உடனே தெரிந்துகொள்ளுங்கள்

Savings Account: மக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த கணக்குகளின் வங்கி வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2024, 12:37 PM IST
  • சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்?
  • சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் என்ன?
  • சேமிப்பு கணக்கு வட்டிக்கான வரி விதிப்பு எவ்வளவு?
இந்த அளவுக்கு மேல் சேமிப்பு கணக்கில் இருந்தால் பிரச்சனை: வருமான வரி விதிகளை உடனே தெரிந்துகொள்ளுங்கள் title=

Savings Account: இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் வங்கிக்கணக்கு உள்ளது. அதேபோல, பெரும்பாலும் அனைவரிடனும் ஒரு சேமிப்புக் கணக்கு நிச்சயமாக இருக்கும். நமது நிதி நிர்வாகத்திற்கு இந்த கணக்கு மிக உதவியாக இருக்கின்றது. சேமிப்பு கணக்கில் பணத்தை போடுவதும் எடுப்பதும் மிக எளிது. ஆகையால் பலர் வங்கி தொடர்பான தங்கள் தினசரி பணிகளை சேமிப்பு கணக்குகளின் மூலம் செய்கிறார்கள். 

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள்

நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் செய்யப்படும் பணப் பரிமாற்றத்தின் (Cash Transactions) அளவு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில் ஆன்லைனில் பணம் செலுத்தும் செயல்முறைகளும் UPI வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் பயன்பாடு இன்னும் அதிகரித்துள்ளது. எந்த வழியில் பணப் பரிமாற்றம் செய்தாலும், இதற்கான விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும். சேமிப்புக் கணக்கிற்கும் வருமான வரித்துறை (Income Tax Department) சில வரம்புகளை விதித்துள்ளது? இந்த வரம்புகள் என்ன? இவற்றை மீறினால் என்ன நடக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சேமிப்பு கணக்குகள்

மக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இந்த கணக்குகளின் வங்கி வாடிக்கையாளர்கள் (Bank Customers) எப்போது வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். இது தவிர, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளையும் வழங்குகின்றன. அதே போல் இந்த கணக்குகளுக்கான சில வரம்புகளும் உள்ளன. 

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? (What is the Limit for depositing Money in Savings Account)

பெரும்பாலான வங்கிகளில், சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், அது பற்றிய தகவலை வங்கி வருமான வரித் துறைக்கு அளிக்க வேண்டும். சேமிப்பு கணக்களுக்கு மட்டுமல்லாமல், நிலையான வைப்பு அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட் (Fixed Deposit), மியூசுவல் ஃபண்டுகள் (Mutual Funds), பத்திரங்கள் (Bonds) மற்றும் பங்குகளில் (Share Market) செய்யப்படும் முதலீடுகளுக்கும் இந்த விதி பொருந்தும்.

மேலும் படிக்க | உங்கள் EPF UAN போர்டலில் Profile Picture இருப்பது மிக அவசியம்: இப்படி அப்லோட் செய்யலாம்

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் (Savings Account Interest)

- நாட்டின் பெரிய மற்றும் தனியார் துறை வங்கிகள் சேமிப்பு கணக்கு வைப்புத்தொகைகளுக்கு 2.70 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டி செலுத்துகின்றன. 

- சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.10 கோடி வரையிலான தொகைக்கு வட்டி விகிதம் 2.70 ஆக உள்ளது.

- சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரூ.10 கோடிக்கு மேல் இருந்தால், 3 சதவிகித வட்டி அளிக்கப்படும். 

- சில சிறு நிதி வங்கிகள் சேமிப்புக் கணக்கில் 7 சதவீதம் வரை வட்டி தருகின்றன. எனினும், இவற்றுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன. 

சேமிப்பு கணக்கு வட்டிக்கான வரி விதிப்பு (Tax For Savings Account Interest)

ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு பெறப்பட்ட வட்டிக்கும் வாடிக்கையாளர்கள் வரி செலுத்த வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) கீழ், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்கள், ஒரு நிதியாண்டில், தங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.10,000க்கு மேல் வட்டி பெற்றால் அவர்கள் கண்டிப்பாக வரி (Tax) செலுத்த வேண்டும். இதில் மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் சேமிப்புக் கணக்கை வேறு ஏதேனும் வருமான ஆதாரத்துடன் நீங்கள் இணைத்தால், அதற்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாதம் ரூ.9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உடனே படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News