Minimum Balance in Savings Account: இந்த காலத்தில் வங்கியில் சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலான மக்களிடம் சேமிப்பு கணக்கு உள்ளது. உங்களுக்கும் ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance)


உங்கள் சேமிப்புக் கணக்கில் (Savings Account) உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகை வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைவாக இருந்தால், அது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதற்குப் பிறகு, நீங்கள் தேவையற்ற பண விரயத்தை எதிர்கொள்ள நேரிடலாம். இதற்குக் காரணம், உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என்றால், உங்கள் வங்கி உங்களுக்குப் பராமரிக்கப்படாததற்கான அபராதத்தை (நான்-மெயிண்டனன்ஸ் ஃபைன்) விதிக்கும். இந்த அபராதம் விதிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 


இதனை தவிர்க்க, உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளதோ, அந்த வங்கியில், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். சில பிரபல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றி இங்கே காணலாம்.


பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)


உங்கள் சேமிப்புக் கணக்கு நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) இருந்து, நீங்கள் ஒரு பெருநகரத்திலோ அல்லது நகரத்திலோ வசித்தால், உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக குறைந்தது 3000 ரூபாய் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறிய நகரம் அல்லது செமி நகர்ப்புறத்தில் வசித்தால், உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.2,000 இருப்பு இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1,000 வைத்திருக்க வேண்டும்.


பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank)


நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான PNB -இல் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பெருநகர, நகர்ப்புற அல்லது செமி நகர்ப்புற கிளைகளில் கணக்கு வைத்திருந்தால், உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.2,000 இருப்பு வைத்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் PNB வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பாக 1,000 ரூபாயை பராமரிக்க வேண்டும்.


எஹ்சிஎஃப்சி வங்கி (HDFC Bank)


நாட்டின் தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின் நகர்ப்புற மற்றும் பெருநகரக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகையாக கணக்கில் ரூ.10,000 வைத்திருக்க வேண்டும். இந்த வங்கியின் கிராமப்புற மற்றும் செமி நகர்ப்புற வங்கிக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகையாக ரூ.5,000 மற்றும் ரூ.2,500 வைத்திருக்க வேண்டியது அவசியம்.


மேலும் படிக்க | பென்சன் பெறும் 60, 70, 75 வயது ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. வங்கி புதிய சலுகை!


ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)


ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.10,000 வைத்திருப்பது அவசியம். செமி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில், 5,000 மற்றும் 2,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் வழக்கமான சேமிப்புக் கணக்குகளை திறந்திருக்கும் வாடிக்கையாளர்கள், ரூ.1,000 இருப்பு வைத்திருக்க வேண்டும்.


கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)


கோடக் மஹிந்திரா வங்கியின் எட்ஜ் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும். இதை தவறினால், மாதந்தோறும் பராமரிப்பு அல்லாத கட்டணமாக ரூ.500 வரை செலுத்த வேண்டும். வங்கி வழங்கும் Kotak 811 சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 


இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)


தனியார் வங்கியான IndusInd வங்கியில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருந்தால், அதன் A மற்றும் B வகைக் கிளைகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 10,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். C பிரிவு கிளைகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5,000 இருக்க வேண்டியது அவசியமாகும்.


யெஸ் வங்கி (Yes Bank)


யெஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளரிடம் இருந்து மாதத்திற்கு ரூ.500 வரை வங்கி கட்டணம் வசூலிக்கிறது.


மேலும் படிக்க | EPF கணக்கில் ரூ.2 கோடி, ரூ.3 கோடி, ரூ.4 கோடி கார்ப்பஸ் பெற மாத முதலீடு எவ்வளவு தேவை? கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ