EPF கணக்கில் ரூ.2 கோடி, ரூ.3 கோடி, ரூ.4 கோடி கார்ப்பஸ் பெற மாத முதலீடு எவ்வளவு தேவை? கணக்கீடு இதோ

EPF Retirement Corpus Calculator: கோடிகளில் கார்ப்பஸ் பெற இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் எவ்வளவு பங்களிக்க வேண்டும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 16, 2024, 10:51 AM IST
  • Employee Provident Fund எவ்வாறு செயல்படுகிறது?
  • குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இபிஎஃப் பங்களிப்புகள் என்ன?
  • EPF -இல் கிடைக்கும் வரி நன்மைகள் என்ன?
EPF கணக்கில் ரூ.2 கோடி, ரூ.3 கோடி, ரூ.4 கோடி கார்ப்பஸ் பெற மாத முதலீடு எவ்வளவு தேவை? கணக்கீடு இதோ title=

EPF Interest Calculator: நாம் பணியில் இருக்கும் போது, நமது மாத சம்பளத்தில் ஒரு பங்கை முதலீடு செய்கிறோம். இந்த தொகை மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்கை பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் பயன்படுத்த நாம் ஒதுக்கிவைக்க திட்டமிடுகிறோம். ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட பல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் நாம் நமது ஆரம்பகால வாழ்க்கையில் பங்களிக்க ஆரம்பித்து, மாதந்தோறும் முதலீடு செய்தால், ஒரு சிறிய முதலீட்டு தொகை கூட, ஓய்வுபெறும் போது பெரிய கார்பஸாக உருவெடுக்கிறது. 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி 

இந்த தொகை கொண்டு பணி ஓய்வுக்குப் பிறகு நம்மால் நமது செலவுகளை கவனித்துக்கொள்ள முடிகிறது. பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான முதலீட்டு திட்டங்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டமும் முக்கியமான ஒன்றாகும். இது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.  இதில் தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் பங்களித்து இதற்கு கூட்டு வட்டியைப் பெறுகிறார்கள். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இந்த முதலீட்டை நீண்ட காலத்திற்குச் செய்தால், அவர்கள் குறிப்பிடத்தக்க கார்பஸை உருவாக்க முடியும். இந்த பதிவில், EPF திட்டத்தைப் பற்றியும், இள வயதில் இதில் முதலீடு செய்தால், ரூ.2 கோடி, ரூ.3 கோடி அல்லது ரூ.4 கோடி கார்பஸைச் சேகரிப்பதற்கான மதிப்பிடப்பட்ட மாதாந்திர பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்

Employee Provident Fund எவ்வாறு செயல்படுகிறது?

குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் உள்ள தனியார் துறை ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கை (EPF Account) தொடங்கலாம். அவர்களது சம்பளத்தில் இருந்து மாதா மாதம் 12% தொகை கழிக்கப்பட்டு, அவர்களின் EPF கணக்கிற்குச் செல்லும். அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கும். நிறுவனத்தின் 12 சதவீத பங்களிப்பில், 3.67 சதவீதம் EPF கணக்கிற்குச் செல்கிறது. மீதமுள்ள, 8.33 சதவீதம், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது. இது ஊழியர்கள் மாத ஓய்வூதியத்தைப் பெற உதவுகிறது. தற்போது இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உள்ளது.

EPF Contributions: குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இபிஎஃப் பங்களிப்புகள் என்ன?

இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ. 1,800. அதிகபட்சம் EPF கணக்கு வைத்திருப்பவரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 12 சதவீதமாகும்.

EPF -இல் கிடைக்கும் வரி நன்மைகள் என்ன?

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு ஊழியர்கள் வரிச் சலுகைகளைப் பெறுகிறார்கள். இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிக்கப்படாது. இது விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) வகையின் கீழ் வருகிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?

EPF Corpus: கார்பஸை எப்போது எடுக்க முடியும்?

10 வருட சேவை முடிந்தவுடன், வேலையில்லாமல் 2 மாதங்கள் இருந்தால், அல்லது 58 வயதில், ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) மொத்தமாக எடுக்க முடியும்.

EPF calculations: இபிஎஃப் கணக்கீடுகளை இங்கே காணலாம்

கோடிகளில் கார்ப்பஸ் பெற இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் எவ்வளவு பங்களிக்க வேண்டும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 25 வயதில் ஒரு நபர் EPF பங்களிப்பைத் தொடங்கி 60 வயது வரை 35 வருடங்களுக்கு பங்களிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

2 கோடி ரூபாய் கார்ப்பசை சேர்க்க தேவையான மாதாந்திர பங்களிப்பு

- ரூ.2 கோடி கார்பஸை சேர்ப்பதற்கு மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.8,451 ஆக இருக்கும்.

- 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட பங்களிப்பு ரூ. 35,49,420 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ. 2,00,01,764.49 ஆகவும் இருக்கும்.

3 கோடி ரூபாய் கார்ப்பசை சேர்க்க தேவையான மாதாந்திர பங்களிப்பு

- ரூ.3 கோடி கார்பஸை சேர்ப்பதற்கு மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.12,680 ஆக இருக்கும்.

- 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட பங்களிப்பு ரூ. 53,25,600 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ. 3,00,10,930.51 ஆகவும் இருக்கும்.

4 கோடி ரூபாய் கார்ப்பசை சேர்க்க தேவையான மாதாந்திர பங்களிப்பு

- ரூ.4 கோடி கார்பஸை சேர்ப்பதற்கு மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.16,901 ஆக இருக்கும்.

- 35 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட பங்களிப்பு ரூ. 70,98,420 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ. 4,00,01,162.18 ஆகவும் இருக்கும்.

மேலும் படிக்க | EPS Pension: வேலை பார்த்துக்கொண்டே ஓய்வூதியமும் பெற முடியுமா? EPFO விதி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News