புதுடெல்லி: அரசியல் நிதியுதவியை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் முயற்சியில், அரசியல் கட்சிகளுக்கான நிதி பங்களிப்புகளுக்கு மாற்றாக தேர்தல் பத்திரங்கள் விறபனை இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கிறது. அக்டோபர் 4ம் தேதியன்று, XXVII கட்ட தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்கும். அக்டோபர் 13 வரை விற்கப்படும் தேர்தல் பத்திரங்களை, பாரத ஸ்டேட் வங்கி (SBI) விற்பனை செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), XXVIII கட்ட விற்பனையில், 04.10.2023 முதல் 13.10.2023 வரை அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் (இணைக்கப்பட்ட பட்டியலின்படி) மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கும் பணமாக்குவதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 


தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?
அரசியல் நிதியுதவியை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் முயற்சியில், அரசியல் கட்சிகளுக்கான நிதி பங்களிப்புகளுக்கு மாற்றாக தேர்தல் பத்திரங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.


தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்


தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான வழிமுறையாகும். இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. இந்தியாவின் எந்தவொரு குடிமகன் மற்றும் நிறுவனங்கள், பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளிலிருந்து இந்தப் பத்திரத்தை வாங்கலாம். ஆனால், இந்தப் பத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிளைகளில் மட்டுமே கிடைக்கும்.


மேலும் படிக்க | பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை இந்த மாதம் ₹ 2300 குறைந்தது, மேலும் குறையும்


தற்போது, 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். தங்களுக்கு பிடித்தமான  அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க உதவும் இந்தத் திட்டத்தின்கீழ், பெயர் வெளியிடாமல் நன்கொடை அளிக்கலாம். தேர்தல் பத்திரத் திட்டம் 2017 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியன்று இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது.


இந்தத் திட்டத்தின் கீழ், பாரத ஸ்டேட் வங்கி அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்க பத்திரங்களை வழங்க தேர்வு செய்யப்பட்டது. KYC என்றழைக்கப்படும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கிடைக்கும் வங்கிக் கணக்கை வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் இந்தப் பத்திரத்தை வாங்கி, அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்கலாம்.


அரசியல் கட்சிக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள், நன்கொடையாளரின் விவரங்களை வெளிப்படுத்தாமலே, கணக்கில் காட்டி அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கலாம். கருப்புப் பணத்தை தேர்தல் நிதிக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு வழிமுறை தேர்தல் பத்திரங்கள் என மத்திய அரசு கூறுகிறது.


முன்னதாக, நன்கொடையாளர்கள் தங்கள் வணிகத்தின் மூலம் ஈட்டும் வருவாயிலிருந்து ரொக்கமாக மட்டுமே நன்கொடை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது, இப்போது தேர்தல் பத்திரங்கள் மூலம், முறைப்படி நன்கொடை அளிக்கலாம். இந்தத் திட்டத்தைத் தொடங்குகையில், அரசியல் நிதியை முறையாகப் பெற்று பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக மட்டுமே நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன என்று அரசாங்கம் கூறியது.


மேலும் படிக்க | வீட்டுக் கடனுக்கு ரூ 9 லட்சம் மானியம்! வட்டி கிடையாது! அசல் மட்டுமே செலுத்தினால் போதும்


தேர்தல் பத்திரங்களை எப்போது வாங்கலாம்?
ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் மொத்தம் 10 நாட்களுக்கு இந்த பத்திரங்கள் விற்பனைக்கு வரும். இந்த ஆண்டு அக்டோபர் 4 முதல் அக்டோபர் 13 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.


தேர்தல் பத்திரங்களை யார் வாங்கலாம்?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவை, மேலும் அவை சமீபத்திய மக்களவை அல்லது மாநிலத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகளைப் பெற்றவையாக இருக்க வேண்டும். 


தேர்தல் பத்திரங்களை எப்படி வாங்குவது?
29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India ) இந்த பத்திரங்களை வெளியிடுகிறது. ரூ. 1,000, ரூ. 10,000, ரூ. 1 லட்சம், ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 1 கோடி என பல மடங்குகளில் பத்திரங்களை வாங்கலாம்.


தேர்தல் பத்திரங்களை எங்கே வாங்குவது?
லக்னோ, சிம்லா, டேராடூன், கொல்கத்தா, கவுகாத்தி, சென்னை, பாட்னா, புது தில்லி, சண்டிகர், ஸ்ரீநகர், காந்திநகர், போபால், ராய்ப்பூர் மற்றும் மும்பை ஆகிய எஸ்பிஐ கிளைகளில் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.


நாட்டின் அரசியல் நிதி திரட்டும் கட்டமைப்பை சுத்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2017இல் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் ஆன நிலையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறைக்கு இன்றியமையாத அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் வெளிப்படையான முறையை நாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த பத்திரங்கள் வெளியிடப்படுவதாக நாட்டின் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.


மேலும் படிக்க | 7th Pay Commission: தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி! ஜனவரி முதல் 50% டிஏ ஹைக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ