தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை - கொளுத்தி போட்ட அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2023, 05:41 PM IST
  • தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை
  • அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்
  • கற்பனையாக பேசுகிறார் அண்ணாமலை
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை - கொளுத்தி போட்ட அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் title=

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறார். ராமநாதபுரத்தில் இருந்து தொடங்கியிருக்கும் அவரது யாத்திரையில் தினம்தோறும் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் அவர், தமிழகத்தில் தாமரை மலர உறுதியேற்போம் என தொண்டர்கள் மத்தியிலும், சந்திக்கும் மக்கள் மத்தியிலும் நம்பிக்கை விதைத்துக் கொண்டிருக்கிறார். பாஜக கூட்டணியில் தான் அதிமுக இருப்பதாகவும் பேட்டியளித்து வருகிறார். அவரின் இந்த பேச்சும், பாதயாத்திரை பயணமும் திமுகவுக்கு சலசலப்பை உருவாக்கியிருக்கிறதோ இல்லையோ அதிமுகவுக்குள் புகைச்சலை உருவாக்கியுள்ளது. அமித்ஷா தமிழ்நாடு அண்மையில் வந்தபோது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்துவோம் என கூறினார். 

மேலும் படிக்க | அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

அவரின் இந்த பேச்சு மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியை தான் அண்ணாமலையும், பாஜகவும் குறி வைக்கிறது என்பதை அதிமுக மூத்த தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து விழித்துக் கொண்டிருக்கும் அதிமுக தலைவர்கள் தமிழ்நாடு பாஜகவையும், அண்ணாமலையையும் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள். செல்லூர் ராஜூ பேசும்போது, அண்ணாமலை just like that தான், நாங்கள் கூட்டணி குறித்து மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜியிடம் தான் பேசுவோம் என அண்மையில் பேட்டி ஒன்றில் பேசினார். மேலும், தமிழ்நாட்டில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை என்றும் கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த அண்ணாமலை, செல்லூர் ராஜூக்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

இது குறித்தும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்தும் அதிமுக மூத்த தலைவர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் அதிமுக தான் வலிமையாக இருப்பதாகவும், அதிமுக வரும் தேர்தல்களில் வென்று ஆட்சி அமைக்கும் என கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், சிறுபான்மை மக்கள், தலித் மக்கள், கிறுத்துவர்கள், இஸ்லாமியர்கள் என எந்த பக்கமும் பாஜகவுக்கு ஆதரவு இல்லாதபோது பாஜக எப்படி ஆட்சி அமைக்க முடியும். கற்பனையையும், ஆசையையும் அண்ணாமலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எல்லாம் நடக்காது என கூறியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு அதிமுக - பாஜக உறவில் புது சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ராகுல் காந்தி உடனே நாடாளுமன்றம் செல்ல முடியுமா? அந்த உத்தரவு வர வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News