வீட்டுக் கடனுக்கு ரூ 9 லட்சம் மானியம்! வட்டி கிடையாது! அசல் மட்டுமே செலுத்தினால் போதும்

Home loan Subsidy: வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவிருப்பதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2023, 03:56 PM IST
  • வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம்
  • மத்திய அரசின் வீட்டுக் கடன் திட்டம்
  • நகர்புற மக்களுக்கு ஜாக்பாட் மகிழ்ச்சி
வீட்டுக் கடனுக்கு ரூ 9 லட்சம் மானியம்! வட்டி கிடையாது! அசல் மட்டுமே செலுத்தினால் போதும் title=

புதுடெல்லி: மோடி அரசு செய்த சிறப்பான திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகி, மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. நகர்ப்புற நடுத்தர மக்களுக்கு வீட்டுக் கடனில் ரூ.9 லட்சம் வரை மானியம் கிடைக்கும் என்ற செய்தி லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது. வீடு இல்லாத நகர்ப்புற மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் மத்திய அரசு விரைவில் விலக்கு அளிக்கும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம்

வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வீட்டு உதவித் திட்டம் குறித்த விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இது விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளில் வீடு வாங்குபவர்களுக்கு மானியம் கொடுப்பதற்காக மத்திய அரசு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும். 2024 தேர்தலுக்கு முன் இந்த கடன் மானியத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கிவிடும்.. நகரங்களில் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

ஆகஸ்ட் 15 அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளை மீண்டும் வலியுறுத்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இது ஒரு பெரிய திட்டமாக இருக்கும், இது வட்டி மானியத்தை வழங்கும் என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையில் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.நகரங்களில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வீட்டுக் கடன் திட்டத்தை தனது அரசு கொண்டு வருவதாகக் கூறினார். இந்த வகையில் வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் அதிக சலுகைகளைப் பெறுவார்கள்.

சொந்தமாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு வட்டி விகிதத்தில் நிவாரணம் கிடைக்கும், வீட்டுக் கடனுக்காக ரூ.60 ஆயிரம் கோடி செலவிட அரசு தயாராக உள்ளது. 

மேலும் படிக்க | வீட்டுக் கடன் வாங்க போறீங்களா... விரைவில் வருகிறது மத்திய அரசின் கடன் மானிய திட்டம்!

நடுத்தர குடும்பங்களுக்கு நிம்மதி

நகரங்களில் வசிக்கும், சொந்த வீடு இல்லாத நடுத்தரக் குடும்பத்தினர் சொந்த வீடு வாங்கும் திட்டத்திற்கு உதவி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் கடனுக்கான வட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அதாவது, கடன் பெற்றவர்கள், வாங்கிய அசல் கடன் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் என்பதும், வட்டித் தொகையை செலுத்த வேண்டியதில்லை என்பதும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்..

இந்தத் திட்டம் அடுத்த சில வாரங்களில் நாட்டில் அமல்படுத்தப்படலாம். நகர்ப்புறங்களில் வசிக்கும் 25 லட்சம் நடுத்தர மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இத்திட்டத்தின் கீழ், வீட்டுக்கடன் வட்டியில் அரசு 9 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கும்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை 
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் பேசினார். அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் 5 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கைகளால் இது சாத்தியமானது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.  

டீசல்-பெட்ரோல் விலை 
பாஜக அல்லாத மாநிலங்களை, குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு, பாஜக ஆளும் மாநிலங்களை விட எரிபொருள் விலையை அதிகமாக வைத்திருப்பதற்காக மத்திய அமைச்சர் தாக்கிப் பேசினார். பாஜக ஆளும் மாநிலங்களை விட மேற்கு வங்கம் போன்ற பாஜக அல்லாத மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.11.80 அதிகமாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜக மக்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை இந்த மாதம் ₹ 2300 குறைந்தது, மேலும் குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News