Personal Loan Apply: தனிநபர் கடன் என்பது தனிப்பட்ட தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் ஆகும். கடன் வாங்க குறைந்தபட்ச ஆவணங்களை கொண்டிருந்தால் போதும். எந்தவொரு சட்டபூர்வமான நிதித் தேவைக்கும் இந்தக் கடனிலிருந்து நீங்கள் நிதியைப் பயன்படுத்தலாம். வேலை, ஏற்கனவே கடனை திருப்பிச் செலுத்திய வரலாறு, வருமான நிலை, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தனிநபர் கடன் தீர்மானிக்கப்படுகிறது. மற்ற கடனைப் போலவே, வங்கியுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி அதை நீங்கள் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.  இந்த கடனை மாதம் மாதம் தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன?


தனிநபர் கடனை குறைந்த வட்டியில் தரும் வங்கிகள்


HDFC வங்கி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி, ஆண்டுக்கு 10.5 சதவீதம் முதல் 24 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களுடன் தனிநபர் கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. HDFC கடன்களுக்கான செயலாக்கக் கட்டணம் ரூ.4,999 ஆக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோடக் மஹிந்திரா வங்கி: கோடக் மஹிந்திரா வங்கி தனிநபர் கடனுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 10.99 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இருப்பினும், செயலாக்கக் கட்டணங்கள் வரிகளுடன் சேர்த்து கடன் தொகையில் 3 சதவீதம் வரை அதிகமாக இருக்கலாம்.


பாரத ஸ்டேட் வங்கி: பாரத ஸ்டேட் வங்கி (SBI) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 12.30 சதவீதம் முதல் 14.30 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளின் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 11.30 சதவீதம் முதல் 13.80 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. மற்ற பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 11.15 சதவீதம் முதல் 12.65 சதவீதம் வரை சலுகை விகிதங்களில் கடன்களை வழங்குகிறது.


பாங்க் ஆஃப் போராடா: பேங்க் ஆஃப் பரோடா தனியார் துறை ஊழியர்களுக்கு தனிநபர் கடனை ஆண்டுக்கு 13.15 சதவீதம் முதல் 16.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தில் வழங்குகிறது. மறுபுறம், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12.40 சதவீதம் முதல் 16.75 சதவீதம் வரை சலுகை விகிதங்கள் வழங்கப்படுகின்றன. வங்கியில் அக்கவுண்ட் இல்லாத தனியார் துறை ஊழியர்கள் ஆண்டுக்கு 15.15 சதவீதம் முதல் 18.75 சதவீதம் வரையிலான விகிதத்தில் கடன் பெறலாம்.


ஐசிஐசிஐ வங்கி: இரண்டாவது பெரிய தனியார் கடன் வழங்கும் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி, ஆண்டுக்கு 10.65 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை வட்டி விகிதங்களுடன் தனிநபர் கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  கூடுதலாக, ஐசிஐசிஐ வங்கி 2.50 சதவிகிதம் வரை செயலாக்கக் கட்டணங்களையும், பொருந்தக்கூடிய வரிகளையும் விதிக்கிறது.


பஞ்சாப் நேஷனல் வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து ஆண்டுக்கு 13.75 சதவீதம் முதல் 17.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12.75 சதவீதம் முதல் 15.25 சதவீதம் வரை சலுகை விகிதங்கள் வழங்கப்படுகின்றன.


ஆக்சிஸ் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி: ஆக்சிஸ் வங்கி தனிநபர் கடன்களை ஆண்டுக்கு 10.65 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை வட்டி விகிதங்களுடன் வழங்குகிறது. கரூர் வைஸ்யா பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு ஆண்டுக்கு 11 சதவீதமும், பாதுகாப்பற்ற தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 13 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.


தனிநபர் கடன் வாங்க தேவையான முக்கிய ஆவணங்கள்


- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2
- வேலைபார்க்கும் இடத்தில் வழங்கப்படும் அடையாள அட்டை.
- சம்பளம் வாங்கும் வங்கியின் ஸ்டேட்மென்ட்.
- கடந்த 6 மாத சம்பளம் பெற்ற விவரம் அல்லது படிவம் 16.
- நிரந்தர கணக்கு எண் (PAN).


மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ