உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்?

Savings Account: சேமிப்பு கணக்குகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் டெபாசிட் செய்து வைத்து இருந்தால் அதற்கான வருமான ஆதாரத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

 

1 /5

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி உள்ள நிலையில் பலரும் தங்களது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்கின்றனர். ஒரு நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /5

சேமிப்புக் கணக்குகளில் அதிகபட்ச பண வரம்பை மீறி பரிவர்த்தனை செய்தால் வருமான வரி நோடீஸை பெற வேண்டி இருக்கும். அதற்கு உரிய பதில் அளிக்காத பட்சத்தில் நீங்கள் வரி கட்ட வேண்டி வரும்.   

3 /5

வருமான வரித்துறையின்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்புக் கணக்கில் ரொக்கமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.  ஒரு நிதியாண்டில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், அந்த நபரின் அனைத்து கணக்குகளையும் கணக்கில் கொண்டு கணக்கிடப்படுகிறது.   

4 /5

வருமான வரிச் சட்டம் 1962 இன் பிரிவு 114B இன் படி, அனைத்து வங்கிகளும் அல்லது நிதி நிறுவனங்களும் அதிக அளவில் ரொக்கமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டால் வருமான வரித் துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.   

5 /5

விதிகளின்படி, உங்கள் சேமிப்புக் கணக்கில் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வைத்திருந்தால், அதற்கு வருமான வரி விதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் இருந்தால், நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.