அருட்பெருஞ்ஜோதியாக, அன்புக்கு அடையாளமாக,  மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் முக்கண்ணன் சிவபெருமானுக்கு உகந்த நாள் திங்கள். திங்களன்று சிவபெருமானை வணங்கினால் தொல்லைகள் அனைத்தும் துலங்கி, நிம்மதியான வாழ்க்கை சித்திக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பனியால் உறைந்திருக்கும் கைலாயம் முதல் கடல்நீர் அருகில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் (Rameshwaram) வரை சிவபெருமானின் ஆலயங்கள் எங்கும் நீக்கமற அமைந்திருக்கின்றன. 


சிவ வழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. வேதங்களில் ருத்ரன் என்று அழைக்கப்படும் சிவபெருமான் (Lord Shiva) துன்பங்களைத் துடைப்பவன்.


திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். சோமவார விரதம் இருந்து சிவாலயம் சென்று வணங்கினால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று திங்கட்கிழமை, சிவாலயம் சென்று வணங்கினால் சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இன்றைய தினம் அனைத்து ராசியினரும் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் கடன் தீரும்,நோய்கள் நம்மை விட்டு ஓடு,, விலகும் சொல்வாக்கும், செல்வாக்கும் அதிகரிக்கும்.  


Also Read | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...எண்ணமே செயலாகும்... சிந்தனையே சிறப்பாகும்..


சிவன் என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல அர்த்தங்கள் உண்டு. எப்போதும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி (Yogi) என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும் பெயர் பெற்றவர் முக்கண் முதல்வன்.


ஆலகால நஞ்சை உண்ட கைலைநாதன் ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரளயம் உண்டாகியது. பிரபஞ்சத்தை காக்க எண்ணிய உமையாள், தனது பதியை வணங்கி சீற்றத்தை விட்டு, சாந்தமாக வேண்டினார். சக்தியின் வேண்டுதலை ஏற்ற சிவம், சீற்றம் அடங்கி மக்களுக்கு அருள் பாலிக்கும் நாதனானார்.  


அன்னையின் வேண்டுதலை ஏற்ற ருத்ரன், சாத்வீகமான சதாசிவமாக மாறியது ஒரு திங்கட்கிழமைத் தான்.  இந்த சோமவார திங்கட்கிழமையன்று ஐயனை வணங்கி ஐயனின் அருளைப் பெற்று அமோகமாக வாழலாம்.  


Also Read | அன்னையின் தரிசன உலா... உங்களுக்காக...


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR