தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவதன் அடிப்படை என்ன? சத்குரு விளக்கம்
பெண் குழந்தைகளுக்கான தினமாக 2008, ஜனவரி 24ஆம் நாள் முதல் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி: பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கான தினமாக 2008, ஜனவரி 24ஆம் நாள் முதல் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையின் சார்பில் சத்குரு (Sadhguru) டிவிட்டர் செய்தியில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், பெண் குழந்தைகளுக்குக் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
நமது மகள்கள் சமுதாயத்துக்கும் உலகத்துக்கும் வழங்கக்கூடிய அனைத்திற்கும், அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு (Women) சம வாய்ப்பு மற்றும் பங்களிப்பு கொடுப்பது மனிதகுலத்திற்கு மிக முக்கியமானது என்று சத்குரு தெரிவித்தார்.
பெண்களுக்கென பல பிரச்சனைகள் இன்றளவும் இருக்கிறது. இந்தியா (India) போன்ற ஆண்களை மையமாகக் கொண்ட சமுதாயத்தில் பெண் குழந்தைகள் பிறப்பதை முழு மனதுடன் வரவேற்கும் நிலைமை இன்னும் முழுமையாக உருவாக்கவில்லை.
Also Read | Indira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று
பெண்களின் பிறப்பு கொண்டாடப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களுக்கு கல்வி (Education), சமத்துவம், பொருளாதார தன்னிறைவு என பல உரிமைகளுக்காகவும் போராட வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது.
இதுபோன்ற சமமில்லாத நிலையை மாற்றுவதற்காகவும், மக்களிடையே பெண்களின் முக்கியத்துவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜனவரி 24ஆம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சமூகத்தின் பெண் குழந்தைகளின் உரிமையும், சமவாய்ப்பும் உறுதி செய்யும் பொருட்டு, இந்த தினத்தை அனுசரிப்பதோடு நிற்காமல், பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதை உறுதி செய்யவேண்டும்.
Also Read | Solar Fencing எவ்வாறு செயல்படுகிறது? மானியம் பெற தயாரா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR