திருத்தப்படுகிறதா 2021 JEE Main, NEET syllabus: என்ன கூறுகிறது கல்வி அமைச்சகம்
அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எப்படி, எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்துகளைப் பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்.
புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், தேசிய தேர்வு முகமையிடம் (NTA) தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து, JEE Main, NEET உட்பட அடுத்த ஆண்டு நடத்தப்படவிருக்கும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டங்களை தயார் செய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
குறிப்பிடத்தக்க வகையில்,ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal), கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணித்திட்டங்கள் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
பாடத்திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர், NTA, பல்வேறு மாநில மற்றும் மத்திய பள்ளி கல்வி வாரியங்களில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்யும் என்று அவர் கூறினார். இது தவிர, அடுத்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எப்படி, எப்போது நடத்துவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கருத்துகளைப் பெற ஒரு பிரச்சாரமும் தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“பல்வேறு போர்டுகளில் உள்ள தற்போதைய சூழ்நிலையை மதிப்பீடு செய்த பின்னர் JEE Main, NEET போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களைப் பற்றி NTA முடிவெடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு எவ்வாறு, எப்போது தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற கல்வி அமைச்சகத்தினால் ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ALSO READ: CBSE 10, 12 ஆம் வகுப்பு 2021 பொதுத் தேர்வுகள் தாமதிக்கப்படுமா?
UGC ஸ்காலர்ஷிப், ஃபெல்லோஷிப் குறித்து போக்ரியால் கூறுகையில், “கூட்டத்தில், அனைத்து உதவித்தொகைகளும், ஃபெலோஷிப்களும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு நான் யுஜிசியை பணித்தேன். இதற்கான ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவும் கூறியுள்ளேன்.
மாணவர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும்படியும் நான் அவர்களுக்கு உத்தரவிட்டேன். அடுத்த கல்வியாண்டிலிருந்து தாய்மொழியில் கல்வி வழங்கும் பொறியியல் படிப்புகள் துவக்கப்படும் என்ற முடிவும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஒரு சில IIT மற்றும் NIT-களும் இதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன." என்று தெரிவித்தார்.
தாய்மொழியில் பொறியியல் கல்வி என்பது பல மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR