Recruitment 2022: கோல் இண்டியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Coal India MT Recruitment 2022: மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்கிறது கோல் இண்டியா நிறுவனம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்...
Employment News: 481 மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கோல் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
மனிதவளம், சுற்றுச்சூழல், பொருட்கள் மேலாண்மை, சந்தைப்படுத்தல், விற்பனை உட்பட பல்வேறு துறைகளுக்கான காலியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு இது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்,அடுத்த மாதம், அதாவது 2022, ஆகஸ்ட் ஏழாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை முதல் (2022, ஜூலை 8) முதல் விண்ணப்ப நடைமுறை தொடங்குகிறது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில், கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கோல் இந்தியா நிறுவனம் காலியிடங்களை நிரப்புகிறது.
மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை பார்க்க எஞ்சினியர்கள் தேவை
கோல் இந்தியா MT ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு தொடர்பாகவும், அதன்படி நிரப்பப்படவிருக்கும் 481 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் கோல் இந்தியா நிறுவனத்தின் வலைதளத்தில் @coalindia.in, அறிவிப்பை சரிபார்க்கவும்
கல்வித் தகுதி: பட்டதாரி
கோல் இந்தியா விளம்பர எண்: 3/2022
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 08 ஜூலை 2022
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07 ஆகஸ்ட் 2022
மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு
கோல் இந்தியா MT ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்புக்கான காலியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்: 481
பணியாளர் & HR-138
சுற்றுச்சூழல்-68
பொருட்கள் மேலாண்மை-115
சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை-17
சமூக மேம்பாடு-79
சட்டம்-54
மக்கள் தொடர்பு-06
நிறுவன செயலாளர்-04
மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு
கல்வி தகுதி: HR- பட்ட படிப்புடன் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலை பட்டப்படிப்பு/PG டிப்ளமோ/முதுகலைப் பட்டதாரி திட்டம் மேலாண்மையில் HR/தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் HR(மேஜர்) இல் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.பணியாளர் மேலாண்மை அல்லது MHROD அல்லது MBA அல்லது மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்.
சுற்றுச்சூழல் - குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலை பட்டம் / டிப்ளமோ உடன் ஏதேனும் பொறியியல் பட்டம் பெற்றுருக்க வேண்டும்.
மேலும் படிக்க | ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR