புதுடெல்லி: தேர்வின் முடிவுகளால் நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள் குதூகலிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் குறைவான மதிப்பெண் வாங்கியவர்களும், தேர்வில் தோல்வியடைந்தவர்களும் மன அழுத்தத்தை எதிர்க் கொள்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் board exams முடிவுகள் வெளிவந்து, பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் மாதவன் சமீபத்தில் தனது பப்ளிக் எக்ஸாம் மதிப்பெண்களை வெளியிட்டார்.


 


 


  



மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை என்று சொல்லி கவலையில் இருப்பவர்களை ஊக்குவிக்கும் நல்ல வேலையை செய்திருக்கிறார் மாதவன்.    


"தங்களது போர்டு முடிவுகளைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்… தங்களுடைய எதிர்பார்ப்புகளை மீறி, அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்... எஞ்சியவர்களே, என்னுடைய பப்ளிக் எக்ஸாம் மதிப்பெண் 58% கிடைத்தது தெரியுமா?   விளையாட்டு இன்னும் தொடங்கவில்லை my dear friends…” என்று நடிகர் மாதவன் ட்வீட் செய்துள்ளார்.


பரிட்சையின் மதிப்பெண்கள் தான் நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் அது உண்மையல்ல. உங்கள் இலக்குகளை அடைய உங்கள் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் கடின உழைப்பு மிகவும் முக்கியமானது.


Read Also | தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்களின் விவரங்கள்


மாதவனின் ட்வீட்டர் செய்தியானது, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. "நீங்கள் எப்போதும் உத்வேகம் கொடுக்கிறீர்கள் மேடி" என்ற பொருள்படும் "You are an inspiration, Maddy," என ஒருவர் மாதவனை பாராட்டியிருக்கிறார். 


மற்றொருவரோ, "அட, என்ன ஒரு அன்பே .. அவர்களை எப்படி உற்சாகப்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியும்! நீங்கள் பலருக்கு இன்று உற்சாகமளித்திருப்பதாக நான் நம்புகிறேன், அவர்களின் பெற்றோருக்கு உங்களுடைய செய்தி சென்று சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். தங்கள் குழந்தைகளை அவர்கள் எளிதாக கையாள உதவியாக இருக்கும்" என்று பாராட்டியுள்ளார்.


இதற்கிடையில், மாதவன் நடிப்பில் 'Rocketry: The Nambi Effect' என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் 'Rocketry: The Nambi Effect'.