தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்களின் விவரங்கள்

12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. 

Last Updated : Jul 16, 2020, 02:52 PM IST
    1. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.
    2. இந்த தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8% மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
    3. தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்களின் விவரங்கள் title=

சென்னை: தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் வியாழக்கிழமை (ஜூலை 16) தமிழக வாரியம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 2020 என அறிவித்தது. முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஆன்லைனில் கிடைக்கின்றன - dge.tn.gov.in, dge1.tn.nic.in, tnresults.nic.in.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. 97.12 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 

 

ALSO READ | TN 12th Results 2020: +2 பொதுத்தேர்வு முடிவுகள் @tnresults.nic.in இணையதளத்தில் வெளியீடு..!

சுமார் 8 லட்ச மாணவர்கள் எழுதிய இந்த தேர்வுகளின் முடிவுகள் காலையே வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8% மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.

தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அது தவிர மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும். 

+2 பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களின் மூலம் காணலாம்.... 

dge.tn.gov.in 

tnresults.nic.in

dge1.tn.nic.in

dge2.tn.nic.in

 

TN +2 பொது தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி...

 

  • TN பொது தேர்வு முடிவுகளின் அதிகாரப்பூர்வ தளமான  tnresults.nic.in இல் பார்வையிடவும்.
  • அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் TN பொது தேர்வு முடிவு 2020 இணைப்பைக் கிளிக் செய்க.
  • மாணவர்கள் ரோல் எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்ட பின்பு புதிய பக்கம் திறக்கப்படும்.
  • பின்னர் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் முடிவு திரையில் காண்பிக்கப்படும்.
  • முடிவை சரிபார்த்து பக்கத்தைப் பதிவிறக்கவும்.
  • தேவைப்பட்டால் மாணவர்கள் தேவைக்கு அதன் நகலை பதிவிரகம் செய்து கையில் கைத்து கொள்ளலாம். 

 

கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம்; 2016 இல் 91.4% தேர்ச்சி சதவீதம், 2017 இல் 92.10% தேர்ச்சி சதவீதம், 2018 இல் 91.10% தேர்ச்சி சதவீதம், 2019 இல் 91.30% தேர்ச்சி சதவீதம், 92.34%, 2020 இல் தேர்ச்சி சதவீதம்.

 

ALSO READ | சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவு 2020: கம்பார்ட்மெண்டில் 8.02% மாணவர்கள் வைப்பு

ஊரடங்கு காரணமாக சில மாணவர்கள் இறுதி தேர்வு எழுதாமல் இருந்ததால், அவர்களுக்கு சிறப்பு தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வு முடிந்த பின், அந்த பாடத்திற்கான மதிப்பெண் தனியாக வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Trending News