புதுடெல்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், NHAI வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பில், துணை மேலாளர் (தொழில்நுட்ப) பணிகளுக்கு ஆள் எடுக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்வமுள்ள தகுதியானவர்கள், ஜூலை 13, 2022க்கு முன் NHAI இன் அதிகாரப்பூர்வ தளமான nhai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு இயக்ககத்தின் மூலம், நிறுவனத்தில் மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்படும். 


தேவைக்கு ஏற்றபடி, பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | SCI Recruitment 2022: இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு


இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்குத் தேவையான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப செயல்முறை, வயது வரம்பு, தகுதி, அனுபவம் மற்றும் பிற விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். 


NHAI ஆட்சேர்ப்பு 2022 ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும்


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.  


NHAI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022
தேர்வு செயல்முறை


அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, UPSC ஆல் நடத்தப்படும் பொறியியல் சேவைகள் (E.S) தேர்வில் (சிவில்) இறுதித் தகுதி (எழுத்துத் தேர்வு & ஆளுமைத் தேர்வு) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க | பி.இ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு


வயது வரம்பு
30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் விளம்பரப்படுத்தப்பட்ட பதவிகளுக்கான உயர் வயது வரம்பு, இந்திய அரசின் விதிகளின் படி தளர்த்தப்படும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியான விண்ணப்பதாரர்கள் NHAI இன் அதிகாரப்பூர்வ தளமான nhai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த முறையிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


மேலும் படிக்க | ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR