School Opening: விரைவில் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படலாம் -ICMR
ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்கலாம் என்றும் பின்னர் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர். தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புது டெல்லி: கொரோனா தொற்றுநோயின் 2வது அலைக் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர் தரப்பில் இருந்து ஒரு பெரிய அறிக்கை வெளியாகி உள்ளது. ஆரம்பப் பள்ளிகளை (primary school) முதலில் திறக்கலாம் என்றும் பின்னர் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர். தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இதுகுறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும். அந்தந்த மாநிலத்தில் கொரோனா நிலவரத்தை பொருத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஐ.சி.எம்.ஆர் (ICMR) தரப்பில், சிறு குழந்தைகள் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் முதலில் ஆரம்பப் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறினார். 6 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளிடம் ரத்த அணுக்களின் ஆய்வு எனப்படும் செரோ சர்வே கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட பெரியவர்களைப் போலவே அவர்களிடமும் அதே அளவில் ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பாவின் பல நாடுகளில் தொடக்கப் பள்ளிகள் மூடப்படவில்லை என்று டாக்டர் பார்கவா மேற்கோள்காட்டினார். கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளிலும் அங்கு பள்ளிகள் மூடப்படவில்லை. எனவே தொடக்கப் பள்ளிகளை முதலில் திறக்க முடியும் என்பது எங்கள் கருத்து எனக் கூறினார்.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி:
மேலும் பேசிய அவர், முதலில் ஆரம்பப் பள்ளி, அதன் பிறகு மீண்டும் மேல்நிலைப் பள்ளிகளைத் (Secondary school) திறக்கலாம் என்றார். ஆனால் ஆசிரியர்கள் முதல் அனைத்து பள்ள ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த முடிவு மாவட்ட மற்றும் மாநில அளவில் எடுக்கப்படும். இது பல காரணிகளைப் பொறுத்தது. பள்ளியுடன் தொடர்புடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த மாநிலங்களின் கொரோனா சோதனை நிலவரம், பாதிப்பு விகிதம் என்ன, பொது சுகாதார நிலைமை என்ன என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ALSO READ | ICMR: சென்னையில் மாஸ்க் அணிவது அதிகரிப்பு; கொரோனா 3ம் அலையை சமாளித்துவிடுமா?
குறைவான தொற்று உள்ள பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படலாம்:
கொரோனா தொற்று (Coronavirus) குறைந்துள்ள மாவட்டங்களில் வெவ்வேறு கட்டங்களில் பள்ளிகளை திறக்க முடியும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார். 5 சதவீதத்திற்கும் குறைவான தொற்று வீதம் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என்று டாக்டர் குலேரியா தெரிவித்திருந்தார். குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்கு மாற்று வழிகள் ஆராயப்பட வேண்டும் என்றார். குழந்தைகள் கூட இந்த வைரஸுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.
வைரஸ் பாதிக்கப்படக் கூடிய நிலையில் 40 கோடி மக்கள்:
67 சதவீத இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பெற்றிருப்பதாக, அதேநேரத்தில் 40 கோடி மக்கள் இன்னும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கணக்கீடு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய 4-வது கட்ட செரோ சர்வே மூலம் தெரியவந்துள்ளது.
ALSO READ | தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR