JEE Online Exam Fraud: ஆன்லைன் தேர்வு மோசடி! ரஷ்ய ஹேக்கர்களின் சாமர்த்தியம்!!
போட்டித் தேர்வுகளிலும் மோசடி! ஆன்லைனில் ஹேக்கர்களின் துணிகர சம்பவம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலை. வெளிநாட்டு ஹேக்கர்களின் சதியால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு....
புதுடெல்லி: ஜேஇஇ, ஜிமேட் போன்ற போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் ஹேக் செய்து மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்த மோசடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பிலும் ஹேக்கர்களின் கைவரிசை காட்டப்பட்டுள்ளது.
இந்த மோசடியை கண்டறிந்த டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடத்திய சோதனையில் 6 பேரை கைது செய்துள்ளது.
இந்தியாவில் JEE, GMAT, SSC மற்றும் ராணுவத்தின் ஆன்லைன் தேர்வுகளில் மோசடி (Online Exam Fraud) செய்த ரஷ்ய ஹேக்கர்கள் செய்யும் புதிய சதி பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல், ரஷ்ய ஹேக்கர்களை தொடர்பு கொண்டு, ஆன்லைன் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் மடிக்கணினிகளுக்கு ரிமோட் அணுகலை எடுத்து, அங்கிருந்து அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்தனர்.
Also Read | ஆன்லைனில் DL அப்ளை செய்கிறீர்களா; மோசடிக்கு பலியாகாதீர்கள்
கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்று பல மாணவர்கள், நாட்டின் மிக முக்கியமான தேர்வுகளில் வெற்றிபெற லட்சக்கணக்கில் பணம் செலுத்தி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எதிர்காலத்தில் நாட்டின் உயர் பதவிகளில் அமர்ந்து நாட்டின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றும் அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் தேர்விலேயே இந்த மோசடி (Online Fraud) நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, மாணவர்களுக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கும்பலுக்காக ரஷ்ய ஹேக்கர்கள் பிரத்யேகமென்பொருளை உருவாக்கியுள்ளனர், இதன் உதவியுடன் எந்த மடிக்கணினியையும் தொலைவிலிருந்து அணுகலாம். தேர்வுத் தளத்தைத் திறந்து, மடிக்கணினி அல்லது கணினியில் மாணவர்கள் தேர்வு எழுதும்போது, யாரோ ஒருவர் உங்கள் லேப்டாப்பைக் கட்டுப்படுத்தி அதை இயக்கத் தொடங்குகிறார்.
பொதுவாக, இப்படி மோசடி நடக்கும் போது, தேர்வை நடத்தும் துறைக்கு இந்த விஷயம் தெரியவந்துவிடும். ஆனால் ரஷ்ய ஹேக்கர்களின் விவகாரத்தில் தேர்வு நடத்தும் துறைக்கும், இதுபற்றி தெரியவில்லை. ஏனென்றால், ரஷ்ய ஹேக்கர்கள் அத்தகைய மென்பொருளை உருவாக்கியுள்ளனர், இது எந்த மடிக்கணினியையும் தொலைவிலிருந்து அணுகும்போது அதன் தகவலை ரகசியமாக வைத்திருக்கும்.
இந்த சாப்ட்வேர் மூலம் தேர்வெழுதும் மாணவ, மாணவியர் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார், வெகு தொலைவில் (Remote Acces) இருக்கும் ஹேக்கர் லேப்டாப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அனைத்து கேள்விகளுக்கும் ஆன்லைனில் பதில் எழுதிவிடுவார். இதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுகிறது.
ரஷ்ய ஹேக்கர்களின் உதவியுடன், இந்த கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளில் GMAT இல் 18 மாணவர்களையும், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் SSC இன் ஆன்லைன் தேர்வுகளில் 500 மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்துள்ளது. உண்மையிலேயே தகுதி இல்லாத ராணுவம் மற்றும் அமைப்பில் நுழைவது ஆபத்தானது.
இந்த வழக்கில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மொத்த கும்பலுக்கும் மூளையாக செயல்பட்டவர் பட்டப்படிப்பு கூட முடிக்காத ராஜ் தியோதியா. 33 வயதான இந்த நபர், ஆக்ரா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் கணினி ஆய்வகங்களைத் (Computer Lab) திறந்துள்ளார்.
ALSO READ | கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்
அங்கு அவர் மாணவர்களுக்குப் பதிலாக அங்கு அமர்ந்து தேர்வு எழுதுபவர்களை அழைத்து வந்தார். மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதுபவர்களை ‘சால்வர்’ (Solver) வைப்பவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
ஹரியானாவில் இந்த குற்றவாளி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராஜ் தியோதியாவை பற்றி தகவல் சொல்பவர்களுக்கு ஹரியானா காவல்துறை ஒரு லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
தற்போது இந்த கும்பலிடம் இருந்து 15 மடிக்கணினிகள் மற்றும் 9 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் இந்த குற்றவாளி ரஷ்ய ஹேக்கர்களுடன் பல வருடங்களாக தொடர்பில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
வினாத்தாள் கசிவைத் தடுக்க, அரசுத் துறைகளில் கண்காணிப்பும், கடுமையும் அதிகரித்த போது, தேர்வு மோசடிக்கு ப்ளூடூத் (Bluetooth) போன்ற தொழில்நுட்பங்கள் உதவி செய்தன.
தற்போது, ஆன்லைன் போட்டித் தேர்வு முறைக்கு சவால் விடும் ஹேக்கர்கள் (Online Exam Fraud) அதிர்ச்சி ஏற்படுத்துகின்றனர். இந்த ஹேக்கர்கள் மூலம் GMAT தேர்வில் ஒரு மாணவர் 800க்கு 780 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது அதிர்ச்சியையும், மனவருத்தங்களையும் ஏற்படுத்துகிறது.
Also Read | Time capsule: 130 ஆண்டுகள் பழமையான கால இயந்திரம் கண்டுபிடிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR