சென்னை: தெற்கு ரயில்வேயில் நிலை 2, நிலை-1 காலிப்பணியிடங்களில் சாரணர் இயக்கம் மற்றும் வழிகாட்டி இடஒதுக்கீட்டின் கீழ் காலியிடங்கள் நிரப்படவிருக்கின்றன... ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே: நிலை 2 பதவியில் இரண்டு காலி இடங்கள்;  நிலை 1ல் பதவியில் 12 இடங்கள் உள்ளன. ஐசிஎப் தொழிற்சாலையில், நிலை 1 பதவியில் 2 இடங்களும், நிலை 2ல்  ஒரு இடமும் அறிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிப்படைத் தகுதிகள்: சாரணர்/வழிகாட்டி/ ரோவர்/ ரேஞ்சர் (அல்லது) ஹிமாலயன் வூட் பேட்ஜ் (HWB) என எந்தவொரு பிரிவிலும் ஜனாதிபதி விருது வைத்திருப்பவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகளுக்கு சாரணர் இயக்கத்தில் உறுப்பினராக  இருந்திருக்க வேண்டும். அதேபோல, தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற குறைந்தது இரண்டு  சாரணர் நிகழ்ச்சியிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதன் அடுத்தக் கட்டத்தில், தேசிய, மாநிலம் மற்றும் மாவட்ட  சாரணர் இயக்கத்தில் கலந்து கொண்டு சாரணர் சேவை செய்ததன் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.


மேலும் படிக்க | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


கல்வித் தகுதி:


நிலை 2ல் உள்ள தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு 12ம்  வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிநுட்பம் சாந்த பதவிக்கு SCVT/ NCVTல் அங்கீகரிக்கப்பட்ட  ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நிலை 1ல் உள்ள பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (அல்லது) ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் (அல்லது)  தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  


வயது வரம்பு: 


நிலை 2 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2023 அன்று 30-க்கு வயதுக்கு மிகாமலும், 18 வயதுக்கு குறையாமலும் மேலும் இருக்க வேண்டும். நிலை 1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2023 அன்று 33 வயதுக்கு மிகாமலும், 18 க்கு குறையாமலும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.


மேலும் படிக்க | Ration Card:இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக், சர்க்கரை கூட கிடைப்பதில்லையாம்


நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டு வரை மேலும் ஐந்தாண்டுகள் கூடுதல் சலுகை பெற தகுதி உண்டு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை கிடைக்கும்.


விண்ணப்பக் கட்டணம்:  விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.


விண்ணப்பிக்கும் வழிமுறை


Southern Railway Recruitment Cell வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் புகைப்படத்தையும் இணைத்து தபாலில் அனுப்பவேண்டும். துடன் விண்ணப்பிக்க வேண்டும்.


THE CHAIRMAN, 15. Details of IPO Name of the P Railway Recruitment Cell, Southern Railway,III Floor, No.5, Dr. P.V.Cherian Crescent Road, Egmore,chennai - 600 008  "என்ற முகவரிக்கு  அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.


மேலும் செய்திகள் | JOBS: இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க விருப்பமா? கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ