Ration Card:இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக், சர்க்கரை கூட கிடைப்பதில்லையாம்

மாநிலத்தின் அந்த்யோதயா குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்பது லட்சம் கார்டுதாரர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக சர்க்கரை கிடைக்கவில்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2022, 03:43 PM IST
  • ஜார்கண்ட் மாநிலத்தில் ஒன்பது லட்சம் கார்டுதாரர்களுக்கு தீபாவளி நேரத்தில் சர்க்கரை மற்றும் உப்பு கிடைக்காது.
  • ஏழு மாதங்களாக சர்க்கரை கிடைக்கவில்லை.
  • இப்போது கார்டு வைத்திருப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக உப்பும் கிடைக்கவில்லை.
Ration Card:இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக், சர்க்கரை கூட கிடைப்பதில்லையாம் title=

ரேஷன் கார்டு விதிகள்: தீபாவளி மற்றும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் சத பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது. இந்த முறை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு உப்பும் சர்க்கரையும் கிடைக்காது. ஆம்!! இந்த முறை ஜார்கண்ட் மாநிலத்தில் ஒன்பது லட்சம் கார்டுதாரர்களுக்கு தீபாவளி நேரத்தில் சர்க்கரை மற்றும் உப்பு கிடைக்காது. மாநிலத்தின் அந்த்யோதயா குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்பது லட்சம் கார்டுதாரர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக சர்க்கரை கிடைக்கவில்லை. இப்போது கார்டு வைத்திருப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக உப்பும் கிடைக்கவில்லை.

உப்பு விநியோக திட்டம் 2011-12 முதல் தொடங்கப்பட்டது

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் அந்தியோதயா குடும்பத்திற்கு ஒரு கிலோ சர்க்கரை மானிய விலையில் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் 2011-12 முதல் உப்பு விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, ​​இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் தொடர்புடைய குடும்பங்களுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் வீதம் விநியோகிக்கப்படுகிறது.

மூன்று முறை டெண்டரை ரத்து செய்ய வேண்டி வந்தது

சர்க்கரை கொள்முதல் செய்வதற்கான பணிகள் மே மாதம் முதல் நிறைவடைகிறது. ஒப்பந்ததாரரும் பங்கேற்காததால், மூன்று முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டது. ஒருமுறை டெண்டரில், சந்தை விலையை விட அதிக விலை கேட்கப்பட்டதால், துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்க்கரையைப் பொறுத்த வரையில் இது பண வர்த்தகம். அரசு இதை கடனாக கொடுக்கிறது. ஜார்கண்டின் புவியியல் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, எந்த ஏலதாரரும் இதில் பங்கேற்க விரும்புவதில்லை.

மேலும் படிக்க | ரேஷன் விநியோக விதிகளில் பெரிய மாற்றம், இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள் 

மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான அந்த்யோதயா குடும்பங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், டீலர்களுக்கு சர்க்கரை விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஏஜென்சி போக்குவரத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சர்க்கரை விநியோகம் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஏஜென்சியில் இருந்து ரேஷன் டீலர்களுக்கு சர்க்கரை வழங்கப்படும். அதன்பின், மூன்று மாதங்களுக்கான சர்க்கரை, ஒரே நேரத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும். மீதமுள்ள மாதத்தில் சர்க்கரை விநியோகம் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவடைந்து வருகிறது.

மண்ணெண்ணெய் விலை உயர்வு

ஜார்க்கண்டில் உள்ள ரேஷன் டீலர்கள் மண்ணெண்ணெய் டெண்டர் எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மண்ணெண்ணெய்க்கான மானியத்தை மத்திய அரசு திரும்பப் பெற்ற பிறகு, அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பயனாளிகள் மண்ணெண்ணெயை இங்கு வாங்குவதில்லை. பொது வினியோகம் மூலம் வினியோகிக்கப்படும் மண்ணெண்ணெயில் லிட்டர் ஒன்றுக்கு 50 பைசா வீதம், மாநில திட்டத்தில் இருந்து செலவு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி; அசத்தல் தீபாவளி பரிசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News