வாஷிங்டன்: கொரோனா (Corona Virus) நெருக்கடி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைக்கும் நிலையில் மாணவர்களுக்கு   அமெரிக்காவிலிருந்து கெட்ட செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அமெரிக்கா மாணவர்களுக்கான Students Visaக்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திங்களன்று தெரிவித்த அமெரிக்கா, Students Visaக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையான, ஐ.சி.ஈ (US Immigration and Custom Enforcement-ICE) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’புலம்பெயர்ந்தோர் அல்லாத F-1 மற்றும் M-1 விசா வைத்துள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் தான் நடைபெறுகின்றன.  எனவே இந்த வகை விசாக்களை வைத்துள்ள மாணவர்கள் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்தகைய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் '.


Read Also | அமெரிக்க தேர்தல்களின் இந்தியாவின் கை ஓங்கியது! இந்தியாவின் நட்பை நாடும் அமெரிக்கக் கட்சிகள்!!


அடுத்த செமஸ்டர் முழுவதிலும் ஆன்லைன் மூலமாக கல்வி பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் / திட்டங்களுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விசாக்கள் வழங்காது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை தெளிவுபடுத்தியுள்ளார்.  
அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின்படி, எஃப் -1 மாணவர்கள் கல்வி பாடங்களையும், எம் -1 ரக விசா வைத்திருக்கும் மாணவர்கள் தொழிற்கல்விப் படிப்புகளையும் படிக்கின்றனர். 


பெரும்பாலான அமெரிக்க கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அடுத்த செமஸ்டருக்கான திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை. பல பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் நேரடியான வகுப்பையும் எடுப்பதோடு, ஆன்லைனிலும் பாடம் நடத்துகின்றன.  ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற சில நிறுவனங்கள் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளன. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆன்லைனில் படிப்பு நடத்தப்படும்,  .


Institute of International Education (IIE) கல்வி நிறுவனம் அறிவித்திருப்பதன்படி, 2018-19 கல்வியாண்டில் அமெரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இருந்தனர், இது மொத்த அமெரிக்க உயர்கல்வி மக்கள்தொகையில் 5.5 சதவீதமாகும். 2018 இல் சர்வதேச மாணவர்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 44.7 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் கிடைத்துள்ளது.  சீனா, இந்தியா, தென் கொரியா, செளதி அரேபியா மற்றும் கனடாவைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் படிக்கச் செல்வார்கள்.