கவுஹாத்தி: அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக முன்னணி வகிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் மாநிலத்தில் உள்ள மொத்தம் 126 தொகுதிகளுக்கு பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.


பாஜக கூட்டணி 81 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


Also Read | பின்னடையும் முன்னணி நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல்


தற்போதைய நிலவரங்களை பார்க்கும்போது, மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசே தொடரும் என்று தெரிகிறது. இதை மாநில முதல்வர் சோனோவால் உறுதிபடுத்துகிறார்.


அசாம் தேர்தல் முடிவு 2021 லைவ்: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.  மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெற்ற 126 உறுப்பினர் அசாம் சட்டமன்றத் தேர்தலின் கிளைமாக்ஸ் இன்று.


இந்தத் தேர்தலில் 946 வேட்பாளர்கள் களம் கண்டனர். மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற தேர்தலின் முடிவை தெரிந்துக் கொள்ள வேட்பாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா


தற்போதைய முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், மஜூலி தொகுதியில் இருந்து போட்டியிட்டார், மாநில சுகாதார மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கோஹ்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டார். அசாம் பிரதேச காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா (Ripun Bora) பின்னடைவை சந்தித்துள்ளார்.


இன்னும் சில மணி நேரத்தில் அசாம் மாநில தேர்தல் களத்தில் வீழ்ந்தது யார்?  வென்றது யார் என்ற எண் கணக்கு எண்ணிக்கைகள் தெரிந்துவிடும்.


Also Read | மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR