சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2017 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை, பத்திர திட்டங்களிடம் இருந்து கிடைக்கும் வருவாய் போன்றவற்றை பொறுத்து ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைத்து வருகிறது.


அதன் படி, சிறுசேமிப்பு திட்டங்களின் நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்பு திட்டம் மீதான வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் குறைக்கப்பட்டு 8.6 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி மூத்த குடிமக்கள் 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 7 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான தேசிய சேமிப்புப் பத்திரம் பொது வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றுகான வட்டி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


112 மாதங்களில் முதிரும் கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு 7 புள்ளி 7 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 113 மாதங்களில் முதிரும் வகையிலும் வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


ஓராண்டு, 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகள் வைப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 9 சதவீதமாகவும் 5 ஆண்டு வைப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் 7 புள்ளி 8 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 8 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.