LIVE Gujarat Assembly Election 2022: மதியம் 3 மணி வரை 50.51% வாக்குகள் பதிவாகின

Mon, 05 Dec 2022-4:21 pm,

LIVE Gujarat Assembly Election 2022: மதியம் 3 மணி வரை 50.51% வாக்குகள் பதிவாகின. 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

Gujarat Election 2022 Second phase Vidhan Sabha Chunav 2022 Polling Live Updates: குஜராத் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகு ஆட்சி அமைக்க முடியுமா என்ற முயற்சியில் காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது. வலுவான இரும்புக்கோட்டையாக விளங்கும் குஜராத்தை தக்கவைத்துக்கொள்வதில் பாஜக தீவிரமாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில வெற்றி, அதற்கு குஜராத்திலும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மும்முனைப் போட்டி நிலவும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தொடங்கிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையுடன் மத்தியப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 2017 சட்டமன்றத் தேர்தலில், 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.


முன்னதாக, டிசம்பர் 1 ஆம் தேதி குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டத் தேர்தலில், சுமார் 63.31 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். குஜராத் சட்டப் பேரவையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன, டிசம்பர் 1 ஆம் தேதி சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 89 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.


இரண்டாம் கட்டத் தேர்தலில், அகமதாபாத், காந்திநகர், மெஹ்சானா, படான், பனஸ்கந்தா, சபர்கந்தா, ஆரவலி, மஹிசாகர், பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, ஆனந்த், கெடா மற்றும் சோட்டா உதய்பூர் மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றையத் தேர்தல் வாக்குப்பதிவில் கட்லோடியா, விராம்கம் மற்றும் காந்திநகர் தெற்கு தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Latest Updates

  •  பிற்பகல் 3 மணி வரை 50.51% வாக்குகள் பதிவாகியுள்ளன

    குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 50.51% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் வாக்கை செலுத்தினர்:
    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வதோதராவில் உள்ள வாக்குச்சாவடியில் இரண்டாம் கட்ட குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தனர்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் கேட்டுக்கொண்டு உள்ளர்.

     

  • பிரதமர் மோடியும் அவரது கட்சியும் விவிஐபிகள் -சாடிய முதல்வர் மம்தா
    ‘பிரதமரும் அவரது கட்சியும் எதையும் செய்யலாம்... அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்’ என குஜராத் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், பிரதமர் மோடி மேற்கொண்ட பேரணி குறித்து முதல்வர் மம்தா சாடியுள்ளார். 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வாக்களிக்கும் நாளில் சாலை பேரணிக்கு அனுமதி கிடையாது. அனுமதிக்கப்படாது. ஆனால் பிரதமர் மோடியும் அவரது கட்சியும் விவிஐபிகள். அவர்களால் எதையும் செய்ய முடியும். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள் -மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக ANI ஊடகம் தெரிவித்துள்ளது.

     

  • தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி?
    குஜராத் தேர்தல் 2022: வாக்குப்பதிவு நாளில், வாக்களிக்கச் சென்ற பிரதமர் மோடி இரண்டரை மணி நேரம் ரோட்ஷோ மேற்கொண்டார். இதுக்குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்போவதாகவும், தேர்தல் ஆணையம் அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா.

     

  • மதியம் 1 மணி வரை 34.74% வாக்குகள் பதிவாகின:

     

  • இரு கைகளை இழந்த மாற்றுத் திறனாளி வாக்களித்தார்:
    "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு விபத்தில் என் இரு கைகளையும் இழந்தேன். ஆனால் அது என்னை வாக்களிப்பதை ஒருபோதும் தடுத்ததில்லை. இப்போது வாக்களிக்க என் கால்களைப் பயன்படுத்துகிறேன் - அங்கித் சோனி

  • குஜராத் சிம்மாசனம் ஏழாவது முறையாக நமக்கே! அடுத்து என்ன? திட்டமிடும் பாஜக

  • நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள் -காத்வி (ஆம் ஆத்மி கட்சி)
    "வீட்டை விட்டு வெளியேறி, வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறும் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள். ஆனால் நீங்கள் வாக்களித்தால் மட்டுமே அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்க முடியும். 89 இடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 51-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டம் என ஒவ்வொரு கட்டத்திலும் 52-க்கும் மேற்பட்ட இடங்கள் நாங்கள் வெல்லுவோம் என செய்தி நிறுவனமான ANI ஊடகத்திடம்  காத்வி தெரிவித்தார்.

  • பாஜக தலைவர்கள் கூட்டம்: 
    டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைமையகத்தில் நடைபெறும் கட்சியின் இரண்டு நாள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

     

  • ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்குகளை செலுத்தினார்.

    வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுசுதன் காத்வி, மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்ட அவர், நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்; ஆனால் நீங்கள் வாக்களித்தால் மட்டுமே அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்க முடியும் என்று கேட்டுக்கொண்டார். குஜராத் தேர்தலின் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளில், ஆம் ஆத்மி 51க்கும் அதிகமான இடங்களையும், இரண்டாம் கட்டத்தில் 52க்கும் அதிகமான இடங்களிலும் வெல்லும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

  • குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வாக்களித்தார். காந்திநகரில் உள்ள ரேசன் தொடக்கப் பள்ளியில் சக்கர நாற்காலியில் வந்து ஹீராபென் மோடி வாக்களித்தார்.

  • குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 19.7% வாக்குகள் பதிவாகியுள்ளன. பல தலைவர்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை செய்துக் கொண்டிருக்கின்றனர்.

  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது தொகுதியில் வாக்களித்தார். பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அமித் ஷா, "அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் - இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா தனது தொகுதியில் வாக்களித்தார்.  

  • குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா மற்றும் அவரது மனைவி அகமதாபாத்தில் இன்று வாக்களித்தனர்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, இது ஜனநாயகத் திருவிழா என்று சொன்னார்.

    இது ஜனநாயகத்தின் திருவிழா. ஒவ்வொருவரும் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். நானும் இன்று வாக்களித்தேன். அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். குஜராத் மக்கள் புத்திசாலிகள், அவர்கள் எப்போதும் சிந்தித்து வாக்களித்துள்ளனர். இந்த முறையும் அதையே செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.

  • குஜராத் சட்டமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காவல்துறை மற்றும் அரசு இயந்திரத்தை பாஜக பயன்படுத்துகிறது என்று குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தக்கோர் குற்றம் சாட்டியுள்ளார்

  • Gujarat Assembly Election 2022: டிசம்பர் 5 குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காலை 9 மணி வரை 4.75% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் வாக்களித்தார்

    குஜராத் சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். காந்திநகர் ராஜ்பவனில் இருந்து கிளம்பிய பிரதமர் நரேந்திர மோடி, ராணிப் நிஷான் பப்ளிக் பள்ளியில் தனது வாக்குகளை பதிவு செய்தார். 

  • குஜராத் தேர்தல் தொடர்பாக ஹர்திக் படேலின் வேண்டுகோள்

    குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில், விரும்கம் தொகுதி பாஜக வேட்பாளர் ஹர்திக் படேல் போட்டியிடுகிறார். 'அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாஜக சட்டம் ஒழுங்கை பராமரித்து குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளது. குஜராத்திகள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அழகு என்பதால் நமது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும்’ என்று அவர் டிவிட்டரில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • குஜராத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    குஜராத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

     

  • வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மோதல் 

    குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற் முன்னரே, அரசியல் கட்சியினர் இடையில் அரசியல் போர் தொடங்கியுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான காந்திபாய் காரடி, தன்னை பாஜகவினர் கடத்தி தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாங்கள் பயப்படவில்லை, பயப்படவும் மாட்டோம், எப்படி இருந்தாலும் போராட்டுவோம் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதிவு வைரலாகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link