குஜராத் சிம்மாசனம் ஏழாவது முறையாக நமக்கே! அடுத்து என்ன? திட்டமிடும் பாஜக

BJP vs Elections: அகமதாபாத் கோட்டையை கைப்பற்றிய பிறகு அடுத்த தேர்தல் தொடர்பாக தலைவர் நட்டா தலைமையில் பாஜகவின் கலந்தாலோசனைக் கூட்டம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2022, 08:09 AM IST
  • குஜராத் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் ஆவலுடன் பாஜக!
  • ஏழாவது முறை வெற்றி நிச்சயமா?
  • தலைவர் நட்டா தலைமையில் பாஜகவின் கலந்தாலோசனைக் கூட்டம்
குஜராத் சிம்மாசனம் ஏழாவது முறையாக நமக்கே! அடுத்து என்ன? திட்டமிடும் பாஜக title=

அகமதாபாத்: குஜராத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தத்தை இப்போதிலிருந்தே தொடங்க பாஜக விரும்புகிறது. குஜராத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த அமர்வில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. காந்திநகரில் வாக்களித்துவிட்டு, இரண்டு நாள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்புவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் கட்சிப் பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்கள், முன்னணிகள் மற்றும் அமைப்புப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள். குஜராத்தில், காந்திநகர் மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட 93 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும் படிக்க | Gujarat Assembly Election 2022: டிசம்பர் 5 குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

பாஜக தலைவர் நட்டா தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் 

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால வியூகம் குறித்து விவாதிக்கப்படும். அடுத்த கட்ட மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டு பல்வேறு அமைப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

கட்சித் தலைவர்கள் ஆண்டு முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், இந்தக் கூட்டம் ஆய்வுப் பயிற்சியாகச் செயல்படும். கடந்த நாடாளுமன்ற்த் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்த தொகுதிகளில் தனது நிலையை வலுப்படுத்தவும், 2024ல் வெற்றியை உறுதி செய்யவும், மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைத் தவிர, திரிபுரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யாருக்கு முடிவுரை? குஜராத் முதல் கட்ட வாக்குபதிவு

பாஜக ஏழாவது முறையாக வெற்றி பெற விரும்புகிறது

2024 மக்களவைத் தேர்தலில், குஜராத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றியைப் பதிவு செய்ய பாஜக விரும்புகிறது. குஜராத்தில் 1995 முதல் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவினர்  தீவிரமாக பிரச்சாரத்தை நடத்தியது.

பாரதிய கட்சியின் முக்கிய வியூகவாதி அமித் ஷா, 140 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார். தற்போது பாஜகவுக்கு 99 இடங்கள் உள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ இயக்கத்தில் பிஸியாக இருப்பதால், அவர் குஜராத்தில் ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம் செய்தார். மறுபுறம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாநிலத்தில் பாஜகவின் மிகப்பெரிய போட்டியாக தன்னை முன்னிறுத்தி வருகிறது.

மேலும் படிக்க | Delhi MCD Elections 2022: டெல்லி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம் - கெஜ்ரிவால் போட்ட திடீர் ட்வீட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News